Pages

Friday 16 August 2013

ஜோதிடம் என்றால்??????

பதிவு 14

உடலில் ஏற்படும் கோளாறுகள், கல்வி, அறிவு, திறமை, நிர்வாகத்திறமை, தொழில், குழந்தைப்பேறு, இதுபோன்ற உடலியல், அறிவு(புத்தி), திறமை, மனம் சார்ந்த விதங்களில் கிரகங்கள் மனிதர்களை இயக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது அல்லது நிர்ணயிக்கிறது.

மேற்படி கருத்து முற்றிலும் தவறானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மேற்படி விஷயங்கள் அனைத்தும் சூழ்நிலை, சந்தர்ப்பங்கள், பயிற்சி, பாரம்பரியம் அல்லது மரபுவழி(gene), போன்ற காரணிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன. கிரகங்களுக்கும் மேற்படி விஷயங்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் நிச்சயம் கிடையாது.

இந்த கருத்துக்கு விளக்கம் அடுத்தப்பதிவில்..... என்று முடித்திருந்தேன்.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஒருவருடைய உடல்நிலையில் ஏற்படும் கோளாறுகளுக்கு சந்தர்ப்பம், (மாசுபட்ட)சூழ்நிலை அவர்களிடம் உள்ள பழக்கவழக்கங்கள் மற்றும் மரபு வழி போன்ற காரணிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன, கிரகங்கள் காரணம் அல்ல என்பது கருத்து.

மேற்படி கருத்தின்படி ஒருவருக்கு புற்று நோய் இருப்பதற்கான காரணம் 1) தீயப் பழக்கம், 2) (மாசுபட்ட) சூழ்நிலை, 3) மரபுவழி, ஆகிய மூன்று காரணங்கள் மட்டுமே இருக்கமுடியும்.

5-6 ஆண்டுகளாக தொடர் புகைப்பழக்கம் (chain smoking) உள்ள ஒருவருக்கு (வேறு கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லை) புற்று நோய் வந்துவிட்டது. அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் அவருடைய புகைப் பழக்கமே புற்று நோய்க்குக் காரணம் என்றார்.

ஆனால் தொடர் புகைப்பழக்கத்துடன் பான்பராக், ஜரிதா, ஹான்ஸ் போன்ற கூடுதலான பழக்கங்களையும் (சுமார் 40 ஆண்டுகளாக) கொண்டுள்ள ஒருவர் மிக நன்றாக வளம் வருகிறார்.

இதற்கென்ன காரணம் என்றால் முன்னவருக்கு மாசுபட்ட சூழ்நிலையும் செர்ந்துகொண்டதால் புற்று நோய் வந்திருக்கலாம் என்று கூறப்படும். பின்னவரும் அதே சூழ்நிலையில்தான் இருக்கிறார், ஆனால் அவருக்கு ஏன் புற்று நோய் வரவில்லை என்று கேட்டால்...

முன்னவருடைய தாய்வழியிலோ தந்தை வழியிலோ பாட்டன் பாட்டி, முப்பாட்டன் முப்பாட்டி யாருக்காவது புற்றுநோய் இருந்து இவருக்கு மரபு வழியாக வந்திருக்கலாம் என்பர்.

விசாரித்ததில் முன்னவருடைய தாய் தந்தை வழியில் மூன்று முந்தைய தலைமுறையில் யாருக்கும் புற்று நோய் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இரண்டாமவரின் தந்தை வழி தாத்தாவிற்கு புற்று நோய் இருந்ததாக தெரிகிறது.

இப்பொழுது சொல்லுங்கள் முன்னவருக்கு புற்று நோய் வந்ததற்கும் பின்னவருக்கு புற்றுநோய் வராததற்கும் என்ன காரணமாக இருக்கும்?

குறிப்பு: இங்கு புகைப்பிடித்தல் பான்பராக், ஜரிதா, ஹான்ஸ் போன்ற புகையிலை பழக்கத்தை நியாயப்படுத்தவில்லை. மேலே கூறப்பட்ட உதாரணம் கற்பனையானதல்ல, உண்மைச் சம்பவம். இதுபோன்ற வேறு வகையில் உண்மைச் சம்பவங்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

அடுத்தப் பதிவில் குழந்தைப்பேறு - சூழ்நிலை, சந்தர்ப்பங்கள், பயிற்சி, பாரம்பரியம் அல்லது மரபுவழி(gene), போன்ற காரணிகள் நிர்ணயிப்பதில்லை-விளக்கம்.

No comments:

Post a Comment