Pages

Friday 9 August 2013

ஜோதிடம் என்றால்????????

பதிவு 9

சென்ற பதிவில்

வானமண்டலத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களை மட்டும் எடுத்துகொள்ளப்ட்டுள்ளது?
மற்றவை ???

இதற்கு விளக்கம்..

உண்மைதான் வானமண்டலத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கின்றன.

ஆனால் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பூமியை சுற்றியுள்ள ராசி மண்டலத்தை, 360 பாகைகளை, 27 சம பாகங்களாக, 13 பாகை 20 கலைகள் கொண்ட பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு 13 பாகை 20 கலைகள் கொண்டபகுதியிலும் உள்ள பிரகாசமான நட்சத்திரக் கூட்டத்தின் பெயரை அந்த பகுதிக்கு சூட்டியுள்ளார்கள் நமது முன்னோர்கள்.

ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் இரண்டுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை கொண்ண்டதாக இருந்தாலும் இங்கு பூமியில் இருந்து பார்க்கும்போது ஒரே நட்சத்திரமாகத் தெரியும்.

இங்கு மீண்டும் ஒரு கேள்வி...

அதாவது, நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள நசத்திரங்களில் இருந்து அதன் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இப்படியிருக்க இன்று பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் 400 ஆண்டுகளுக்குப் பிறகுதானே வந்து சேரும். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தக் குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் பலன்கள் நடக்கும் என்று கூறப்பட்டிருப்பது எப்படி பொருந்தும்? இது விஞ்ஞானக் கருத்துக்கு முரணாக உள்ளதே?

இதற்கு விளக்கம் அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment