பதிவு 10
சென்ற பதிவில்
நட்சத்திரங்கள் பூமியிலிருந்து வெகு தொலைவில் அதாவது ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள நசத்திரங்களில் இருந்து அதன் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இப்படியிருக்க இன்று பூமியில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் 400 ஆண்டுகளுக்குப் பிறகுதானே வந்து சேரும். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தக் குழந்தைக்கு அந்த நட்சத்திரத்தின் பலன்கள் நடக்கும் என்று கூறப்பட்டிருப்பது எப்படி பொருந்தும்? இது விஞ்ஞானக் கருத்துக்கு முரணாக உள்ளதே?
இதற்கு விளக்கம் அடுத்த பதிவில்... என்று முடித்திருந்தேன்.
விளக்கம்..
வானமண்டலத்தை 27 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் அந்தந்தபகுதியில் பிரகாசமாக இருக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் பெயரை சூட்டியுள்ளார்கள் என்று முந்தயபதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த 27 பகுதிகளையும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வரு மண்டலத்திலிருந்தும் ஒரு நட்சத்திரம் வீதம் மொத்தம் மூன்று நட்சத்திரங்களை (பகுதிகளை) நவகிரகங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கி இருக்கிறார்கள்.
அதாவது முதலில் 0 பாகையிலிருந்து 120 பாகைவரை ஒரு மண்டலம்(zone), 120 பாகையிலிருந்து 240 பாகைவரை ஒரு மண்டலம், 240 பாகையிலிருந்து 360 பாகைவரை ஒரு மண்டலம் என்று மூன்று மண்டலங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.
முதல் மண்டலத்தில் உள்ள அசுவனி, இரண்டாம் மண்டலத்தில் உள்ள மகம், மூன்றாம் மண்டலத்தில் உள்ள மூலம் இம்மூன்று பகுதிகளிலும் கேதுவின் ஆதிக்கம் இருக்கும். மேலும் அசுவனி மேஷத்தில் இருப்பதால் செவ்வாய் மற்றும் கேதுவின் ஆதிக்கமும், மகம் சிம்மத்தில் இருப்பதால் சூரியன் மற்றும் கேதுவின் ஆதிக்கமும், மூலம் குரு மற்றும் கேதுவின் ஆதிக்கமும் இருக்கும்.
இந்த அடிப்படையில் அந்தந்தப்குதியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தைப் பொறுத்து பலன் நிர்ணயிக்கப் படுகிறது. சந்திரன் அன்றையதினம் எந்தப் பகுதியில் இருக்கிறதோ அந்தப் பகுதியின் நட்சத்திரமே அன்று பிறக்கும் குழந்தையின் நட்சத்திரம் ஆகும்
எனவே சந்திரன் குறிப்பிட்ட ராசியில், குறிப்பிட்ட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்பொழுது அந்த ராசியின் அதிபதி, நட்சத்திரத்தின் அதிபதி ஆகியவற்றின் அடிப்படையிலேயே பலன்கள் இருக்கும்.
எனவே நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் உயிரினங்களை பாதிப்பதில்லை. சந்திரன் நின்ற ராசி மற்றும் நடச்த்திரப் பகுதியின் அதிபதி இவர்களின் அடிப்படையிலேயே பலன் நிர்ணயிக்கப்படுகிறது.
உதாரணமாக ஒரு குழந்தை கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்திருந்தால் அந்தக்குழந்தை செவ்வாய் மற்றும் சூரியன் இரண்டின் ஆதிக்கத்தின் கீழ் அதன் பலன் இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தக் குழந்தைக்கு முரட்டு சுபாவத்துடன் வைராக்கியம் அல்லது பிடிவாதம் அதிகம் இருக்கும்.
வேறு ஒரு குழந்தை கார்த்திகை 3 ம் பாதத்தில் பிறந்திருந்தால், சுக்கிரன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
கார்த்திகை 3 ம் பாதத்தில் பிறந்த குழந்தை சுக்கிரனுடைய ஆதிக்கத்தால் அலங்காரப் பிரியராகவும் ஆடம்பரப் பிரியராகவும், சூரியனின் ஆதிக்கத்தால் வைராக்கியம், பிடிவாதம் உள்ளதாகவும் இருக்கும்.
இப்படித்தான் ...
சரி மற்றொரு கேள்வி...
வான மண்டலத்தில் இல்லாத ராகு கேதுக்களை ஜோதிடத்தில் சேர்த்த முன்னோர்கள் ஏன் யுரேனஸ், நெப்டியூன், ஆகியவற்றை சேர்க்கவில்லை??
இந்தக் கேள்விக்கு விளக்கம் அடுத்த....

No comments:
Post a Comment