Pages

Thursday, 1 August 2013

ஜோதிடம் என்றால் ????????

பதிவு 1

நான் இந்தப் பக்கத்தை உருவாக்கியதன் நோக்கம் ஜோதிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

எனக்கு ஓரளவுக்கு ஜோதிடத்தில் பரிச்சயம் உண்டு.

1996 முதல் ஜோதிடத்தில் நிறைய ஆய்வுகள் செய்து இருக்கிறேன். '96 க்கு முன்பு எனக்கு ஜோதிடத்தில் ஈடுபாடு இருந்ததில்லை. ஜோதிடம் கற்க ஆரம்பித்த இரண்டு ஆண்டுகள் மற்ற ஜோதிடர்களைப் போல நானும் ஜோதிடத்தை சாதாரணமாகத்தான் நினைத்தேன்.

'98 ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Diplmo in Astrology படித்தேன் அப்பொழுது முதல் ஜோதிடத்தில் எனக்கு நிறைய சந்தேகம் ஏற்பட்டது.

ஜோதிடத்தில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும், என்னிடம் சில பகுத்தறிவாளர்கள் கேட்ட சந்தேகங்களையும் அடிப்படையாக வைத்து ஜோதிடத்தில் பல்வேறு ஆய்வுகள் செய்தேன்.

என் ஆய்வில் நான் தெரிந்து கொண்ட செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விகளையும், சில பகுத்தறிவாளர்களும் அறிவியல் ஆசிரியர்களாலும் என்னிடம் என்னிடம் கேட்ட கேள்விகளையும், ஒவ்வரு கேள்விக்கும் எனக்குத் தெரிந்த அளவுக்கு பதில் அல்லது விளக்கங்களை தொகுத்து தருகிறேன்.

இனி கேள்விகளை பார்ப்போம்....

1. ஜோதிடம் என்றால் என்ன?

ஜோதிஷம் என்ற வடமொழி சொல்லின் தமிழ் வடிவம்தான் ஜோதிடம் (தமிழாக்கம் அல்ல). இந்த ஜோதிஷம் என்ற சொல்லை ஜோதி + இஷம் என்று பிரித்தால்,

ஜோதி என்ற சொல்லுக்கு ஒளிக்கதிர் என்றும், இஷம் என்ற சொல்லுக்கு, அறிவியல், வேதியியல், இயற்பியல், கணக்கியல் போன்ற சொற்களின் இறுதியில் வரும் இயல் என்ற பொருளும் வரும்.

இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் ஒளிக்கதிரியல் என்று பொருள் கிடைக்கும்.

அதாவது சந்திரன், செவ்வாய், புதன், குரு சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் சூரியனிலிருந்து வரும் கதிர்களை வேதி மாற்றங்களுக்கு உட்படுத்தி பிரதிபலிக்கும் கதிர்கள், பூமியில் மனிதர்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது, என்பது குறித்த விஞ்ஞானம் ஆகும்.

2. ஜோதிடத்தை சிலர் தெய்வீகக் கலை என்று சொல்கிறார்கள், சிலர் மூடநம்பிக்கை என்று சொல்லுகிறார்கள். மேற்படி கருத்தைப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்று சொல்வது போல தெரிகிறது. இன்றைய அறிவியல் கம்ப்யூட்டர், ராக்கெட், என்று எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, நீங்கள் ஜோதிடத்தை அறிவியல் என்று சொல்கிறீர்கள், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? பகுத்தறிவு உள்ள நாம் சிந்திக்க வேண்டாமா?

இந்தக் கேள்விக்கு அடுத்த பதிவில் விளக்கம் தருகிறேன்.

No comments:

Post a Comment