Pages

Friday 2 August 2013

ஜோதிடம் என்றால்??????

பதிவு 2

கடந்த பதிவில்

2. ஜோதிடத்தை சிலர் தெய்வீகக் கலை என்று சொல்கிறார்கள், சிலர் மூடநம்பிக்கை என்று சொல்லுகிறார்கள். மேற்படி கருத்தைப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் சார்ந்தது என்று சொல்வது போல தெரிகிறது. இன்றைய அறிவியல் கம்ப்யூட்டர், ராக்கெட், என்று எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, நீங்கள் ஜோதிடத்தை அறிவியல் என்று சொல்கிறீர்கள், எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ? பகுத்தறிவு உள்ள நாம் சிந்திக்க வேண்டாமா? என்ற கேள்வியுடன் முடித்திருந்தேன்.

இதற்கான விளக்கம்

இதே கேள்வியை நான் சற்று மாற்றி அமைக்கிறேன். ஜோதிடம் கலையா? விஞ்ஞானமா? அல்லது அஞ்ஞானமா ?

1. ஜோதிடம் கலையா?

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், ஜோதிடத்தை எதிர்ப்பவர்களும் ஜோதிடத்தை கலை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் ஜோதிடம் கலை அல்ல.

காரணம், கலை என்பது மெய், வாய், கண்,மூக்கு, காது ஆகிய ஐம்புலன்களால் உணர்ந்து ரசிக்கக் கூடியது.

உதாரணமாக, ஓவியக்கலை, சிற்பக்கலை, நடனக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, சமையல் கலை என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க வானவியல் (Astronomy)-ஐயும், கணிதத்தையும் அடிப்படையாக கொண்டது. எனவே ஜோதிடம் கலை அல்ல.

பிறகு ஏன் காலங்காலமாக இன்று வரை ஜோதிடத்தை கலை என்று கூறி வருகின்றனர் என்ற ஒரு கேள்வி இங்கு எழலாம்.

இன்றைய அறிவியல் பாடங்களாகிய B.Sc (Bachelor of Science) Maths, Physics, Chemistry போனன்றவை சுமார் 45 - 50 ஆண்டுகளுக்கு முன் B.A (Bachelor of Arts) என்றுதான் வழங்கப்பட்டது. முன்பு கலையாக இருந்தவை இன்று அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால் அறிவியாலாளர்களும், கல்வியாளர்களும் ஜோதிடத்தை அறிவியலாக அங்கீகரிக்காமல் இருக்கின்றனர். காரணம் பகுத்தறிவு(?)தான்

இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்தால் ஜோதிடம் அறிவியல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்பது திண்ணம்.

ஜோதிடம் அஞ்ஞானமா? (மூடநம்பிக்கையா? அறிவீனமா?)

நிச்சயமாக ஜோதிடம் மூட நம்பிக்கை இல்லை. தனக்கு முன்னால் ஒரு திரையை வைத்துக் கொண்டு திரைக்கு பின்னால் எதுவுமே இல்லை என்று கூறுவதும், திரைக்கு பின்னால் ஏதேனும் (something) இருக்கலாம் என்ற அடிப்படை சந்தேகம் கூட எழாமல் திரைக்குப் பின்னால் ஒன்றுமே இல்லை என்று சாதிப்பதும், தனக்கு தெரியாத ஒரு பொருளை ( Subject or Concept) பொய், தவறு என்று விமர்சிப்பதுதான் அறிவீனம், மூட நம்பிக்கை, அஞ்ஞானம் ஆகும்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் – அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள் - 355

அதாவது ஒரு பொருள் (Subject or Concept) எந்தத் தன்மை உடையதாக இருந்தாலும் அப்பொருளின் உண்மைத்தன்மை, ஆழம் (Reality and Depth) இவற்றை ஆராய்ந்து அறிதலே அறிவு என்பது வள்ளுவர் வாக்கு.

இந்த அடிப்படையில் ஜோதிடத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல், அடிப்படை கூட தெரியாமல் ஜோதிடத்தை பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் விமர்சிப்பது அறிவீனமே அன்றி அறிவுடமை ஆகாது.

ஜோதிடம் விஞ்ஞானமா? (அறிவியலா?)

இல்லை, அறிவியல் என்று தவறாக எழுதி விட்டேன். உண்மையில் ஜோதிடம் ஒரு நுண் அறிவியல் (Micro Science) என்பதே சரி.

ஜோதிடம் விஞ்ஞானம் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களோ ஜோதிடத்தை நுண்விஞ்ஞானம் என்கிறீர்கள்... வேடிக்கையாக இருக்கிறது... எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்று யாரோ கேட்கிறார்கள்.

இந்த இடத்தில் அறிவியல் என்றால் என்ன? என்பது பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிவியல் பற்றி அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் தனது Out of my later years -ல் கூறியிருப்பது.

Science is the attempt - to make the chaotic diversity of our sense experience - correspond to a logically uniform system of thoughts.

அதாவது ஒரு பொருளை (Subject or Concept) பகுத்து ஆராயும் போது கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட அனுபவங்களை, குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தும் முயற்சியே அறிவியல் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.

இந்த அடிப்படையில் மனிதர்கள் உடற்கட்டமைப்பில் ஒத்திருந்தாலும் கல்வி, வாழ்க்கைத்தரம், குணாதிசயங்கள், உடலில் ஏற்படும் நோய்... போன்றவற்றில் வேறுபட்டிருக்க காரணம் என்ன? என்பது பற்றி ஜோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்களாகிய சித்தர்களும், ஞானிகளும் ஆய்வு செய்த பொழுது கிடைத்த தகவல்களை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தி தந்திருப்பதுதான் ஜோதிடம்.

சரி.... அப்படிஎன்றால் ஜோதிடத்தை அறிவியல் என்றுதானே கூற வேண்டும். நுண்விஞ்ஞானம் என்று கூறுவது எப்படி பொருந்தும்? என்று மீண்டும் யாரோ கேட்கிறார்கள்.

அவசரப்பட்டால் எப்படி? பொறுமையாக கட்டுரை முழுவதையும் படித்துவிட்டு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை பதில் தருகிறேன்.

அடுத்தப் பதிவில்

No comments:

Post a Comment