Pages

Tuesday, 6 August 2013

ஜோதிடம் என்றால்?????????

பதிவு 6

சென்ற பதிவில்

(OK இதுவரை கூறப்பட்டவைகளை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்றே வைத்துக்கொள்வோம்) ஆனால் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வானவியலின்படி, தங்களது சுற்றுப் பாதையில் எக்காலத்திலும் பின்னோக்கிச் செல்வதில்லை. ஆனால் ஜோதிடத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வக்கிர கதியில் பின்னோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதையும் விஞ்ஞானம் என்று கூறுகிறீர்களா? விளக்கம் அடுத்தப் பதிவில், என்று முடித்திருந்தேன்

விளக்கம்

நிச்சயமாக. இதிலென்ன சந்தேகம்.? மேற்படி கிரகங்களின் வக்கிரத்தை விஞ்ஞானம் என்றுதான் கூறுவேன். இந்த வக்கிரகதியை ஒரு எளிய உதாரணத்துடன் விளக்கினால் புரியும்.

நாம் பேருந்தில் செல்லும் போது நம் பேருந்து வேறொரு பேருந்தை முந்தி செல்லும்போது அந்தப் பேருந்து பின்னோக்கி செல்வது போலத் தோன்றும்.
உண்மையில் இரண்டுமே முன்னோக்கிதான் செல்கின்றன. இந்த மாயத்தோற்றத்திற்குக் காரணம் இரண்டு பேருந்துகளின் வேக மாறுபாடுதான். இதுவும் ஆறாம் வகுப்புப் பாடமே. (இந்த ஆறாம் வகுப்பு பாடத்தை நீங்கள் படிக்கவில்லையோ?)

இதே போலத்தான் பூமி முதற்கொண்டு அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வரும்போது, வேகமாறுபாட்டால் ஏற்படும் மாயத் தோற்றமே வக்கிரம்.

இப்பொழுது சொல்லுங்கள் ஜோதிடம் விஞ்ஞானம்தானே?

அவசரம் வேண்டாம் நண்பரே, இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன.

சரி & sory,கேளுங்கள் முடிந்தவரை, தெரிந்தவரை விளக்கம் தருகிறேன்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஏன் வக்கிரம் இல்லை?

சூரியன் நிலையானது, சூரியனை பூமி சுற்றும் வேகமும், சந்திரன் பூமியுடன் சேர்ந்து சுற்றும் வேகமும் ஒன்றே. எனவே சூரிய சந்திரர்களுக்கு வக்கிரம் இல்லை.

அடுத்த பதிவில்

சூரியனின் மகன் சனி (கதிரோன் பிள்ளை) என்றும்,
குருவின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்த குழந்தைதான் புதன் என்றும், ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சூரியன் சனிக்குப் பகைவன், சனி சூரியனுக்குப் பகைவன் என்றும்,
குருவின் மனைவிக்கு முறையற்ற வகையில் புதன் பிறந்ததால் குரு புதனிடம் பகைமை கொண்டுள்ளதாகவும், தன் தாயின் கணவர் என்பதால் புதன் குருவிடம் பகைமை பாராட்டாமல் நட்பாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
குரு கிரகம் தேவகுரு, சுக்கிரன் அசுர குரு, எனவே இருவரும் ஒருவருக்கொருவர் பகை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட ராசியை ஆட்சி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் விஞ்ஞானத்தின்படி கிரகங்கள் உயிரற்ற ஜடப்பொருள். அவைகளுக்குள் நட்பு பகை என்ற உறவு எப்படி இருக்க முடியும்? தகப்பன் மகன் உறவு எப்படி இருக்க முடியும்? (குறிப்பிட்ட ராசியை) எப்படி ஆட்சி செய்ய முடியும்? குருவின் மனைவி தாரை என்ற கிரகம் எது? என்ற கேள்விக்கு விளக்கம் காண்போம்

No comments:

Post a Comment