Pages

Tuesday 13 August 2013

ஜோதிடம் என்றால்??????

பதிவு 11

சென்ற பதிவில்

சரி மற்றொரு கேள்வி...

வான மண்டலத்தில் இல்லாத ராகு கேதுக்களை ஜோதிடத்தில் சேர்த்த முன்னோர்கள் ஏன் யுரேனஸ், நெப்டியூன், ஆகியவற்றை சேர்க்கவில்லை??

இந்தக் கேள்விக்கு விளக்கம் அடுத்த....

என்று முடித்திருந்தேன்...

இதற்க்கு விளக்கம்..

ராகு கேது இரண்டும் நிழல் கிரகங்கள் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, கிரகங்கள் என்று கூறப்படவில்லை. இதுபற்றி பதிவு 8ல் கூறப்பட்டுள்ளது . எனவே வானமண்டலத்தில் இல்லாத கிரகம் என்று ராகு கேதுக்களை குறிப்பிட முடியாது.

இப்பொழுது யுரேனஸ், நெப்டியூன், (புளூட்டோ) ஆகியவை ஏன் ஜோதிடத்தில் பயன்படுத்தவில்லை, என்ற கேள்விக்கு...

சில ஆண்டுகளுக்கு முன்புவரை புளூட்டோ வை ஒரு கிரகமாக அங்கீகரித்திருந்தது அறிவியல். அனால் அதே அறிவியல் சமீபத்தில் புளூட்டோ கிரக தகுதியை இழந்து விட்டதாக கூறி, புளூட்டோவிற்கு கிரக அந்தஸ்தை ரத்து செய்தது.

ஆனால் நிழல் கிரகங்களை அன்றுமுதல் இன்றுவரை, கிரகமாக ஜோதிடத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டையும் ஜோதிடத்தில் செர்க்கப்படாததன் காரணம் இவ்விரண்டு கிரகத்தில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளிக்கதிர் பூமியை வந்தடைவதில்லை.. மேலும் இவ்விரண்டு கிரகத்தில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளிக்கதிர்கள் பூமியில் உள்ள உயிரினங்களை இயக்குவதற்குறிய தகுதி இல்லை எனவே இவற்றை இந்திய பாரம்பரிய ஜோதிடத்தில் சேர்க்கப்படவில்லை.

ஆனாலும் மேலை நாட்டவர்கள் யுரேனஸ், நெப்டியூன், கிரக அந்தஸ்த்தை இழந்த புளூட்டோ ஆகிய மூன்று கிரகங்களையும் ஜோதிடத்தில் சேர்த்து ஆய்வு செய்து பலன்களை நிர்ணயித்துள்ளனர். மேலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது நமதுநாட்டிலும் இந்த ஆய்வு தொடர்கிறது..

இங்கு மற்றொரு கேள்வி.....

வானமண்டலத்தில் எங்கோ வெகு தொலைவில் இருக்கும் கிரகங்கள் இங்கு பூமியில் மனிதர்களை எப்படி கட்டுப்படுத்தும்?

இதற்க்கு விளக்கம் அடுத்த பதிவில்....

No comments:

Post a Comment