பதிவு 7
சென்ற பதிவில்
சூரியனின் மகன் சனி (கதிரோன் பிள்ளை) என்றும்,
குருவின் மனைவி தாரைக்கும் சந்திரனுக்கும் பிறந்த குழந்தைதான் புதன் என்றும், ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சூரியன் சனிக்குப் பகைவன், சனி சூரியனுக்குப் பகைவன் என்றும்,
குருவின் மனைவிக்கு முறையற்ற வகையில் புதன் பிறந்ததால் குரு புதனிடம் பகைமை கொண்டுள்ளதாகவும், தன் தாயின் கணவர் என்பதால் புதன் குருவிடம் பகைமை பாராட்டாமல் நட்பாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
குரு கிரகம் தேவகுரு, சுக்கிரன் அசுர குரு, எனவே இருவரும் ஒருவருக்கொருவர் பகை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்ல ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட ராசியை ஆட்சி செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் விஞ்ஞானத்தின்படி கிரகங்கள் உயிரற்ற ஜடப்பொருள். அவைகளுக்குள் நட்பு பகை என்ற உறவு எப்படி இருக்க முடியும்? தகப்பன் மகன் உறவு எப்படி இருக்க முடியும்? (குறிப்பிட்ட ராசியை) எப்படி ஆட்சி செய்ய முடியும்? குருவின் மனைவி தாரை என்ற கிரகம் எது? என்ற கேள்விக்கு விளக்கம் காண்போம்
என்று முடித்திருந்தேன்
விளக்கம்
மேற்படி கேள்விகளில், முதலில் \\\ விஞ்ஞானத்தின்படி கிரகங்கள் உயிரற்ற ஜடப்பொருள். அவைகளுக்குள் நட்பு பகை என்ற உறவு எப்படி இருக்க முடியும்? (குறிப்பிட்ட ராசியை) எப்படி ஆட்சி செய்ய முடியும்?/// என்ற கேள்விகளுக்கு மட்டும் விளக்கம் சொல்லிவிட்டு பிறகு மற்ற விஷயத்திற்கு போவோம்.
ஜோதிடத்தில் இரண்டு கிரகங்களுக்கிடையே உள்ள உறவை மூன்றாகக் குறிப்பிட்டுள்ளனர். அவை நட்பு, சமம், பகை.
இரண்டு கிரகங்களுக்கிடையே பகை என்றால் இரண்டு கிரகங்களிலிருந்து வரும் ஒளி கதிர்களும் ஒன்றுக்கொன்று எதிர் தன்மை உடையன என்றும் பொருள். நட்பு என்றால் சாதகமான தன்மை உடையன என்றும், சமம் என்றால் சமத்தன்மை உடையன என்று பொருள்.
ஒவ்வொரு கிரகமும் (குறிப்பிட்ட ராசியை) எப்படி ஆட்சி செய்ய முடியும்? என்றால், ஏதோ சிம்மாசனம் ஏறி ஆட்சி செய்வதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் அது உங்கள் தவறு. உண்மையில் ஒரு கிரகம் குறிப்பிட்ட ராசியில் ஆட்சி என்றால் அந்த ராசியில் அதன் ஒளிக்கதிர் பலம் 100 பங்கு என்றும், உச்சம் என்றால் 125 பங்கு என்றும், மூலத்திரிகோணம் என்றால் 80 பங்கு என்றும், நட்பு என்றால் 60 பங்கு என்றும், சமம் என்றால் 50 பங்கு என்றும், பகை என்றால் 25 பங்கு என்றும், நீச்சம் என்றால் பலம் அனைத்தும் இழந்து 0 ஆக இருக்கிறது என்றும் பொருள்.
மற்ற விஷயங்கள் புராணங்களில் உள்ள கதைகள். அந்த கதைகளுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. உதாரனமாக குருவின் மனைவி தாரை எந்த கிரகம்? இந்தக் கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இந்த புராணக்கதைகளின் பின் ஏதோ உள்கருத்து இருக்க வேண்டும். மேற்படி புராணக்கதைகள் பற்றிய தெளிவு கிடைக்கும் வரை, ஆதரிக்கவும் மாட்டேன், எதிர்க்கவும் மாட்டேன்.
எனக்குத் தெரியாது அலது என்னிடம் ஆதாரம் இல்லை என்ற காரணத்தை வைத்துக்கொண்டு இதெல்லாம் பொய், கட்டுக்கதை, முட்டாள்தனம் என்றெல்லாம் வாதிடுவதை நான் முட்டாள்தனமாக கருதுகிறேன்.
அடுத்த பதிவில்
கிரகணம் என்பது பற்றி அறிவியல் கூறுது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சூரியனின் ஒளி சந்திரன் மீது விழாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுவதும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்பொழுது சூரியனை சந்திரன் மறைக்கும்போது ஏற்படுவதும்தான் கிரகணம் ஆகும். ஆனால் ராகு, கேதுக்கள் சூரிய சந்திரர்களை விழுங்குவதால்தான் கிரகணம் ஏற்படுகிறது. இது ஜோதிடக் கருத்து. இது விஞ்ஞானக் கருத்துக்கு எதிராக அல்லவா இருக்கிறது?
இது பற்றி விளக்கம்...

No comments:
Post a Comment