பதிவு 5
சென்ற பதிவில்
சூரியன் நிலையானது, பூமி முதற்கொண்டு புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி போன்ற அனைத்து கோள்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன, என்று விஞ்ஞானம் கூறுகின்றது. இது ஆறாம் வகுப்புப் பாடம். ஆனால் ஜோதிடத்தில் சூரியன் முதற்கொண்டு அனைத்து கோள்களும் பூமியை சுற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் சூரியன் ஒரு விண்மீன் (நட்சத்திரம்) ஆனால் ஜோதிடமோ கோள் என்கிறது. சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆனால் இதையும் கோள் என்றே ஜோதிடம் கூறுகிறது. இப்படி ஜோதிடத்தின் அடிப்படையே விஞ்ஞானத்திற்கு எதிராக இருக்கிறது. விஷயம் இப்படி இருக்க ஜோதிடத்தை விஞ்ஞானம் என்றே ஏற்றுக்கொள்ள முடியாது. நீரோ நுண்விஞ்ஞானம் என்கிறீர். வேடிக்கையாக இருக்கிறது. எப்படி ஏற்றுக்க்ள்ள முடியும்? - இதற்கு விளக்கம் காண்போம் - என்று முடித்திருந்தேன்
விளக்கம்
விஞ்ஞானக் கருத்து என்று கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் அதாவது பூமி முதற்கொண்டு அனைத்து கோள்களும் சூரியனைத்தான் சுற்றி வருகின்றன என்பதும், சூரியன் ஒரு விண்மீன் என்பதும், சந்திரன் ஒரு துணைக்கோள் என்பதும் முற்றிலும் மறுக்கமுடியாத உண்மையே.
ஆனால், ஜோதிடத்தில் கூறப்பட்டிருப்பது விஞ்ஞானத்திற்கு முரணாக இருக்கிறது, என்று கூறுவதுதான் தவறு. ஜோதிடத்தில் விஞ்ஞானத்தின்படிதான் கூறப்பட்டிருக்கிறது.
என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை எப்போதும் வியப்பாகத்தானே இருக்கும்.
நாம் வசிப்பது பூமியில் எனவே ஜோதிடம் பூமியை மையப்படுத்தி எழுதப்பட்டது. பூமியிலிருந்து பார்க்கும்போது, பூமியிலிருந்து சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் என்ன கோணத்தில் இருக்கிறது என்று அளவிட்டு கணித்து, எழுதப்பட்டதுதான் ஜோதிடம். இந்த வகையில் பார்க்கும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது, ஆகியவைகள் பூமியைச் சுற்றுவது போல தோன்றும்.
ஜோதிடம் விஞ்ஞானத்திற்கு முரணாக ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையான விஞ்ஞானம், விஞ்ஞானத்திற்கு எதிராகவோ, முரனாகவோ இருக்காது.
மேலும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது சூரியன் ஒரு விண்மீன், சந்திரன் பூமியின் துணைக்கோள். ஆனால் ஜோதிடத்தில் இவ்விரண்டையும் கிரகங்களாக குறிப்பிடப்பட்டிருக்கின்றணவே, இது எப்படி விஞ்ஞானம் ஆகும்?
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய கோள்களும் ராகு, கேது என்ற நிழல் கோள்களும், பூமியில் மனிதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேற்படி கோள்களுடன் சூரியனும், சந்திரனும் சேர்ந்து பூமியில் மனிதர்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே அனைத்திற்கும் சேர்த்து பொதுவாக கோள்கள் என்று பெயரிட்டுள்ளனர். பொதுப் பெயர். இந்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து ஜோதிடம் விஞ்ஞானமற்றது, என்று கூறுவது நியாயமற்றது.
(OK இதுவரை கூறப்பட்டவைகளை தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, என்றே வைத்துக்கொள்வோம்) ஆனால் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வானவியலின்படி, தங்களது சுற்றுப் பாதையில் எக்காலத்திலும் பின்னோக்கிச் செல்வதில்லை. ஆனால் ஜோதிடத்தில் செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களும் வக்கிர கதியில் பின்னோக்கிச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. இதையும் விஞ்ஞானம் என்று கூறுகிறீர்களா? விளக்கம் அடுத்தப் பதிவில்

No comments:
Post a Comment