Pages

Tuesday 7 August 2012

மும்மூர்த்திகளும் அவர்களின் வேலைகளும்....

அன்பானவாசகப் பெருமக்களே வணக்கம்.

இந்தப்பதிவில் முமூர்த்திகளும் அவர்களின் வேலைகளும் என்ற தலைப்பில் மும்மூர்த்திகள் யார்? யார்? அவர்களின் வேலைகள் என்ன?என்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

மும்மூர்த்திகள் : பிரம்மா, விஷ்ணு, சிவன்

இவர்களின் தொழில் : பிரம்மாவின் தொழில் ஆத்தல், விஷ்ணுவின் தொழில் காத்தல், சிவனின் தொழில் அழித்தல்

மேற்படி மும்மூர்த்திகளின் முத்தொழில்களில் முதல் இரண்டுக்கும் பொருள் அவைவருக்கும் தெரியும். ஆனால் சிவனின் தொழிலாகிய அழித்தல் என்பதை பொதுவாக பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்ட உயிர்களை அழிப்பது என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் அழித்தல் என்பதற்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அழித்தல் என்பதே சரியானதாக இருக்கும்.

மேற்படி கருத்துக்களை அப்படியே வரிசை மாறாமல் மாதா, பிதா, குரு இவர்களுடன் பொருத்திப் பாருங்கள்.....

மாதா - பிரம்மா

பிதா - விஷ்ணு

சிவன் - குரு

ஆனால் தற்காலத்தில் சிவனின் தொழிலாகிய மும்மலங்களை அழித்தலை இன்றைய சிவபெருமான்கள் (ஆசிரியர்கள்) செய்கிறார்களா?

இன்றைய ஆசிரியர்களில் சிலர், இவர்களால் அழிக்கப்படவேண்டிய மும்மலங்களின் மொத்த உருவமாக இருக்கிறார்களே, என்பதை நினைக்கும்போது மனது மிகவும் வலிக்கிறது.

உதாரணத்திற்கு சமீபத்திய பள்ளிக்கூடத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றிய செய்திகள்

ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்படும் உதவித் தொகை பல லட்சம் மோசடி செய்த 87 தலைமை ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் என்ற செய்தி

இத்தகைய சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தானே நடக்கிறது

அன்றாடம் நடக்கும் ஏராளமான மோசமான சம்பவங்களில் இதுவும் ஒன்று, எனவே இதை பெரிது படுத்த தேவையில்லை என்பது சிலரின் வாதமாக இருக்கிறது

உண்மைதான் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே நடக்கிறது என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டால் இன்னும் பத்து இருபது ஆண்டுகள் கழித்துப் பார்த்தோமானால், இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த இந்த மோசமான செயல் எங்கும், எதிலும், எப்பொழுதும், யாராலும் தடுக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து நிற்கும்.

சுமார் 1950 களில் நூறு இருநூறு என்ற அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த லஞ்ச லாவண்யங்கள் அடுத்த பத்தாண்டில் 1960 களில் லட்சக்கணக்கில், 1970 களில் கோடிக்கணக்கில், தற்போது ஒருலட்சத்து அறுபதாயிரம் கோடி, 10 லட்சம்கொடி என்று வளர்ந்து நிற்கிறதே அதுபோல மேற்படி பிரச்சனையும் வளர்ந்து விட்டால் நம்நாட்டின் நிலையை நினைத்துப்பார்க்கமுடிகிறதா?

மேலும் இன்றைய தனியார் பள்ளிக்கூடங்களின் நிலையை பார்க்கும்போது அவை நம் குழந்தைகளை  வெறும் மார்க் எடுக்கும் இயந்திரங்களாக மாற்றும் பட்டறைகளாகவும், ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்திகளாகவும், இருப்பதை பார்க்கும்போது .....

இன்னும் எவ்வளவோ எழுதணும் போல இருக்கு..

ஆனால் கோபத்தில் ஏதேனும் தவறாக எழுதிவிட்டால்.... என்ற பயம் வந்துவிட்டது.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றாக தான் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளீர்கள்... உண்மை தான். அவரவர் மனம் மாற வேண்டு...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

MURUGANANDAM said...

The writings about Lord Shiva and his destruction work is interesting. Please continue religious articles like this.

Post a Comment