Pages

Saturday 25 August 2012

பெரியாரிசம்....(பதிவு 1)



பெரியாரிசம் (பதிவு 1)

அன்பு நண்பர்களே பெரியாரிசத்தை விரிவாக அலசவேண்டும் என்று கருதினேன். எனவே இது மிக நீ......ண்ட பதிவாக அமைந்துவிட்டது. ஆகையால் பொறுமையுடன் (விருப்பப்பட்டால்) படித்து உங்களுக்கு தோன்றும் கருத்தை நீங்கள் விருப்பப்பட்டால் பின்னூட்டம் இடுங்கள்.

பெரியாரிசம் ; ஜாதிகள் ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், இதற்கு பெரியாரின் தீர்வு : ஜாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக் கொள்கையும், பெண் அடிமைத்தனம் ஒழிய ஆண்களைப்போல பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளியே வரவேண்டும், ஆகியவை பெரியாரிசத்தின் கொள்கையின் சாராம்சம்.

ஜாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக்கொள்கை : ஜாதிகள் ஒழிய வேண்டும் என்ற கொள்கையை பெரியார் அவர்கள்தான் முதலில் வலியுறுத்திக் கூறினார் என்று இன்றைய பகுத்தறிவு ஜீவிகள் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்.

மகா கவி பாரதியா “சாதிகள் இல்லையடி பாப்பா, குலம் உயர்த்தி தாழ்த்தி சொல்லல் பாவம் என்று சொல்லியிருக்கிறானே?

சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெல்லாம்
பூதவாசல் ஒன்றலோ பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளில் காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? – என்று சாதி பாகுபாட்டையும்,

பறைசியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ? பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் ப்குத்துப்பாரும் உம்முள்ளே. – என்று தீண்டாமையையும் சிவவாக்கியர் என்ற சித்தர் சாடவில்லையா?

சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி. – என்றுஔவையார் சாடவில்லையா?

இவர்கள் யாரும் சாதியை ஒழிக்க கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்க வில்லையே...

மேற்படியாளர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையை கடைபிடிக்காததால்தான் சாதி ஒழியவில்லை, அதனால்தான் பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் எடுத்தார், என்று வைத்துக்கொண்டால் இப்பொழுது மட்டும் என்ன வாழுதாம்... தெருவுக்கு ஒரு சாதி, சாதிக்கு ஒரு கட்சி என்றல்லவா இருக்கிறது... கடவுளை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடுமா? சாதிக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம்.

எந்த ஒரு நல்ல செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது மிக மிக மிக கடினம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றே? ஆனால் எதை சொல்லவேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செய்தியை எப்படி சொல்ல வேண்டும் எங்கு சொல்ல வேண்டும் என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதாவது சொல்ல வேண்டிய செய்தியை மற்றவர் மனது புண்படாதபடியும், எளிமையாகவும், சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு கடவுளுக்கு பாலபிஷேகம் செய்வதால் பல லிட்டர் பால் வீணாகிறது, அந்தப் பாலை பசியால் வாடும குழந்தைகளுக்கு தானமாகக் கொடுத்தால் கடவுள் மிகவும் மகிழ்வார், அபிஷேகம் செயப்படும்ம்பால் யாருக்கும் பயன்படாமல் வீணாவதை அந்த கடவுளே விரும்பமாட்டார் என்று சொன்னால் 100 பேரில் 20 பேராவது சிந்தித்திருப்பார்கள்.

அதை விடுத்து “கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் கூறும்பொழுது “கடவுளை கற்பித்த சித்தர்களும், ஞானிகளும் காட்டு மிராண்டிகளா? என்ற ஒரு கேள்வி எழும. கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை கற்பிப்பவன் காட்டுமிராண்டிஎன்று சொன்னவர்மீது வெறுப்புதான் வரும்.

தொடரும் ....அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment