பெரியாரிசம் (பதிவு
2)
கடவுளை
கற்பித்தவர்கள் ஆரியர்களாகிய பார்பனர்கள் என்ற காரணத்தை முன்வைத்து, பார்பனர்கள்
கற்பித்த கடவுளை மறுக்கிறார்.
ஏன் திராவிடன் உருவ வழிபாடு
செய்யவில்லையா? சூரியனையும், பசுவையும், சிவனையும், பாம்பையும், இயற்கையையும்
வணங்கியதாக திராவிட வரலாறு கூறுகிறதே.
சரி, பார்ப்பனரே
கடவுளை கற்பித்தனர் என்றே வைத்துக்கொள்வோம்,
“எப்பொருள்
எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
இதன் பொருள் : எந்த
ஒரு பொருளையும் (பருப்பொருள், கருப்பொருள்) அது எந்த தன்மையுடையதாக இருந்தாலும்
சரி அதனுடைய உண்மைத்தன்மை, ஆழம், உள்ளார்ந்தக் கருத்து, போன்ற பல பரிமாணங்களில்
ஆய்வு செய்வதே (பகுத்தறிவு) அறிவு.
“எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு”
இதன் பெருள் : எந்த
ஒரு பொருளைப்பற்றியும் ஏதாவது தகவல்கள் இருக்கும். அந்த தகவல் யாரால்
சொல்லப்பட்டது, சொன்னவர் படித்தவரா?, படிக்காதவரா? ஏழையா? பணக்காரனா? ஆட்சி
அதிகாரத்தில் உள்ளவரா? சாதாரண குடிமகனா? முடவனா? ஆன்மீகவாதியா? பகுத்தறிவு வாதியா?
விஞ்ஞானியா, ஆரியனா? (பார்ப்பனனா?), திராவிடனா? என்பதையெல்லாம் விடுத்து
சொல்லப்பட்ட செய்தி அல்லது தகவலின் உண்மைத்தன்மை, ஆழம், உள்ளார்ந்த கருத்து, போன்ற
பல பரிமாணங்களில் ஆய்வு செய்வதே (பகுத்தறிவு) அறிவு.
“குணம்நாடி குற்றமும்
நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்”
இதன் பொருள் :
மேற்படி இரண்டு குறள்களின் படி ஆய்வு செய்தால் கிடைக்கும் வெளிப்பாடுகளில்
நன்மைதீமைகளை ஆராய்ந்து நன்மைகளை எடுத்துக்கொண்டு, (முடிந்தால்) தீமைகளை நன்மைகளாக
மாற்றுவது எப்படி என்று ஆய்வு செய் (பாம்பின் விஷத்திலிருந்து மருந்து கண்டு
பிடித்ததுபோல, அளவிட முடியாத அழிவு சக்தியாகிய அணு சக்தியை பயன் படுத்தி ஆக்க
சக்தியான மின்சாரம் தயாரிக்கப் படுவது போல)
கடவுள் என்ற ஒரு கருப்பொருளை
அல்லது உருப்பொருளை கற்ப்பித்தது யார் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. அதனால்
ஏற்படும் நண்மை என்ன? தீமை என்ன?
ஒரு சிறு செய்தியை
இங்கு நினைவூட்ட விரும்புகிறேன், பள்ளியில் ஆசிரியர் அடிப்பார் அல்லது திட்டுவார்
என்ற பயம் இருந்தால்தானே நம் பிள்ளைகள் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக செய்வார்கள்.
அம்மா அப்பா வருந்துவார்கள் என்ற பயம் இருந்தால்தானே நம் பிள்ளைகள் ஒழுக்கம் தவற
மாட்டார்கள். பிள்ளைகளிடம் மேற்படி பயம் இல்லை என்றால் நிச்சயம் பிள்ளைகள் தடம்
மாறுவது உறுதிதானே.
“குலம் உயர்த்தி
தாழ்த்தி சொல்லல் பாவம்” என்ற
வரியில் பாவம் என்ற சொல்லை பாரதியார் பயன் படுத்தியிருக்கிறார். கரணம் பாவம்
செய்தவர்களை கடவுள் தண்டிப்பார், என்ற பய உணர்வு இருந்தால்தான் பின்தங்கிய சாதிகளை
தாழ்த்தி பேச மாட்டார்கள்
என்ற எண்ணம்தான்.
தீமை செய்தால் பாவம்
சேரும், பாவம் சேர்ந்தால் கடவுள் தண்டிப்பார் என்ற பயஉணர்வு இருந்தால் யாரும் தவறு
செய்ய பயப்படுவார்கள். மேற்படி பயஉணர்வு இல்லாததால்தானே இன்று லஞ்சம, ஊழல்
யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வளர்ந்தோங்கி இருக்கிறது.
படிப்பறிவு இல்லாத
காமராஜர் கல்விக்கே கண்கொடுத்தார். அதனால் இன்றளவிலும் பெருந்தலைவர்
போற்றப்படுகிறார்.
ஆனால்
பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்த திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டதால் இன்றைய
நிலை என்ன? பொதுஉடமையாகிய கல்வி இன்று தனியார் மயம் ஆகி வியாபாரப் பொருளாக,
ஆடம்பரப் பொருளாக சீரழிந்து நிற்கிறதே.
இன்னும் வரும் அடுத்தப் பதிவில்......
No comments:
Post a Comment