Pages

Friday 31 August 2012

பெரியாரிசம் ....... (பதிவு 7)



கடந்த பதிவுகளில் புராணங்களில் உள்ள வாழ்வியல் கோட்பாடுகளுக்கு சில உதாரணங்களை பார்த்தோம்.

இதிகாசங்களில் உள்ள இன்றைய அறிவியலுக்கு சமமான அல்லது மேம்பட்ட சில அறிவியல் உதாரணங்களை பார்ப்போம்.

மகாபாரதத்தில் பாண்டு மகாராஜாவின் மனைவிக்கு கர்ணன், தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்று ஆறு மகன்கள். இவர்கள் ஆறுபேருக்கும் தந்தை பாண்டு மகாராஜா அல்ல.

கர்ணனுக்கு சூரியனும், தருமனுக்கு எமதர்மராஜனும், பீமனுக்கு வாயுபகவானும், அர்ஜுனனுக்கு இந்திரனும், நகுலன் மற்றும் சகாதேவனுக்கு அசுவனி தேவர்களும் தந்தை ஆவார்கள்.

எனவே குந்தி தேவி பத்தினி அல்ல, தன்கணவனை விடுத்து பிற ஆடவர்களோடு கூடி ஆறு மகன்களை பெற்ற குந்தி தேவியை எப்படி பத்தினி என்று ஏற்றுக்கொள்ள முடியும்? என்பது நம் பகுத்தறிவு ஜீவிகளின் ஆராய்ச்சிக் கேள்வி.

இவர்களின் ஆராய்ச்சியும் கேள்வியும் இந்த அளவில்தான் இருக்கும்.

காரணம் இவர்கள் பகுத்தறிவு என்ற இரும்புத்திரைக்கு பின்னால் மறைந்து கொண்டு மறுபுறம் ஒன்றுமே இல்லை என்று சாதிப்பவர்கள். மறுபுறம் ஏதாவது இருக்கலாம் என்ற குறைந்தபட்ச சந்தேகம் அல்லது யூகம் கூட இல்லாதவர்கள்.

இன்றைய காலகட்டத்தில் வாரிசு இலாத தம்பதியினர் “டெஸ்ட் ட்யூப்” முறையில் குழந்தை பெற்றுக்கொள்கிறார்களே, இந்த அடிப்படையில் அந்தப் பெண்ணை நெறிதவறியவள் என்று கூறிவிடமுடியுமா? கேட்டால் விஞ்ஞானம், அறிவியல் என்றெல்லாம் கூறுவார்கள்.

இதே விஞ்ஞானம் மகாபாரத காலத்திலேயே இருந்தது. என்பதை ஏன் இந்த பகுத்தறிவு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர் ஒரு விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு முனிவர் என்பதினால்தானே?

சில ஆண்டுகளுக்கு முன்பு சித்த வைத்தியத்தை மருத்துவம் என்று ஏற்றுக்கொள்ளாத இந்த சமூகம் இன்று அதற்கென்று ஒரு பட்டப் படிப்பையும் ஏற்படுத்திஇருக்கிறது.

சித்த வைத்தியக் குறிப்புகளை எழுதி வைத்தவர்கள் சித்தர்கள் என்ற முனிவர்கள்தானே?

முனிவர்கள் எழுதிய ஒவ்வொரு விஷயமும் வாழ்வியல் கோட்பாடு, அல்லது விஞ்ஞான கோட்பாடு இந்த இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும். இங்கு சித்தர்களைப் பற்றி எழுத ஆரம்பித்தால் விஷயம் எங்கோ சென்றுவிடும்..

இப்படி அறிவியல் மற்றும் வாழ்வியல் சம்மந்தமான விஷயங்கள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் உள்ளன, என்பதால் இவற்றை அழிய அனுமதிக்கக்கூடாது.

பெரியாரிசத்தின் ஒரு பகுதியாகிய “சாதி ஒழிப்பு கொள்கை” என்பது வரவேற்க்கத்தக்கது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை,இருக்கவும் கூடாது. ஆனால் இதற்க்கு பெரியார் கண்டதீர்வுதான் கடவுள் மறுப்புக் கொள்கைதான் சரியில்லை என்பது என்கருத்து.

இந்த கடவுள் மறுப்புக்கொள்கையை வைத்து எழுதினால் நிறைய, நிறைய, நிறைய, எழுதலாம். ஆனால்.....

அடுத்து பெரியாரிசத்தின் மற்றொரு பகுதியாகிய “பெண் விடுதலை”யை ப்பற்றி வரும்பதிவுகளில் .........

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பல கருத்துகளை உதாரணத்துடன் தருவது சிறப்பு... நன்றி...

அடுத்து பெண் விடுதலை ஆரம்பம்... தொடருங்கள்...

Post a Comment