Pages

Saturday 25 August 2012

பெரியாரிசம் .....(பதிவு 3)


பெரியாரிசம் (பதிவு 3)

மீண்டும் பார்ப்பணர் விஷயத்திற்கு வருவோம். கடவுளை வைத்து பார்ப்பணன் பிழைப்பு நடத்துகிறான். அல்லது பிழைப்பு நடத்துவதற்கு கடவுளை பயன்படுத்திக்கொண்டான். கடவுளிடம் பார்ப்பனரல்லாதவர்களை அனுமதிக்க மறுக்கிறான். அதனால் கடவுளை எதிர்க்கிறோம் என்று வைத்துக்கொண்டால்...

இந்த பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த இவர்கள் ஆட்சி காலத்தில் அரசியலை வைத்து கோடிக்கணக்கில் லஞ்ச லாவண்யங்களை வளர்த்து விட்டிருக்கிரார்களே. கோடிகோடியாக பணம் செலவு செய்பவர்களும், கோடிகோடியாக கட்சிக்கு நிதி தருபவர்களும் மட்டுமே அரசியலில் ஈடுபட முடியும், மற்ற சாமானிய திறமைசாலிகள் எவரும் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்ற நிலைக்கு காரணமான இவர்களின் அரசியலை எங்கு கொண்டு புதைப்பது? ;லட்சலட்சமாக கொட்டிக் கொடுத்தால்தான் வேலை. பணம் இல்லாவிட்டால் வேலை இல்லை என்ற அவல நிலைக்கு தள்ளிய இவர்களின் அரசியலை எங்கு கொண்டு எரிப்பது? பத்தாயிரம் இருபதாயிரம் என்று கொடுத்தால்தான் அடிப்படை கல்வியே கிடைக்கும் என்ற கேடுகெட்ட இந்த நிலைக்கு காரணமான அரசியலை புதைபதா? எரிப்பதா?

அரசியலை புதைப்பதிலோ, எரிப்பதிலோ எந்தவிதமான லாபமும் இல்லை, மாறாக தீமையே விளையும். அரசியலை அழிப்பதைவிட அரசியல் வாதிகள் திருந்த வேண்டும் என்பத்தானே சிறந்த வழி. அதேபோல கடவுளை மறுப்பதைவிட பார்ப்பனர்களை த்திருத்துவதுதான் சரியான வழி. கடவுளை மற மனிதனை நினை என்று கோஷமிடுவதைவிட, பார்ப்பனனும் திராவிடனைப்போல மனிதன்தானே என்பது பற்றி சிந்திக்குமா? இந்த பகுத்தறிவு, பார்ப்பனன் ஒழிவதைவிட பார்பனீயம் ஒழிய வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும்.

பெரியார் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை தன் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தி இருந்தாரா? அவருடைய குடும்பத்தில் மனைவி, உடன்பிறந்தோர், உற்றார், உறவினர்களிடம் தன் கடவுள் மறுப்புக் கொள்கையை அறிவுறுத்தினாரா? பெரியாரின் தொண்டர்களாகிய இன்றைய பகுத்தறிவு ஜீவிகள் தங்கள் குடும்பத்தாரிடம் பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையை அறிவுறுத்தினர்களா?

இதற்கு பகுத்தறிவு ஜீவிகளின் பதில் என்ன, தெரியுமா? அது அவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம், அதில் நாங்கள் தலையிடுவதில்லை, என்பார்கள்.

மக்கள் என்ன இளிச்சவாயர்களா? மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதியிருக்கிறது? இவர்களுடைய பெண்டு பிள்ளைகள், குடும்பத்தார், உற்றார் உறவினர் இவர்களெல்லாம் சுதந்திரமாக கடவுளை ஏற்றுக் கொள்ளலாம். தங்களுடைய குடும்பத்தார் மட்டும் சுயமரியாதையுடன் இருக்கலாம். மற்றவர்கள் சுதந்திரத்திலும் சுயமரியாதையிலும் தலையிடுவதற்கு இவர்கள் யார்?

கடவுளை நம்புகிறவன் முட்டாள், என்று எங்களையும், கடவுளை கற்ப்பித்தவன் காட்டுமிராண்டி என்று எங்கள் சான்றோர்களையும் சாடுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

அடுத்தப் பதிவில் இன்னும் வரும்....

No comments:

Post a Comment