பெரியாரிசம் (பதிவு 6)
சென்ற பதிவில் திருவிளையாடற்புராணத்தில் ஒருசிறிய கதையை கூறி அதில் வாழ்வியல் கோட்பாடு ஒன்று உள்ளது சிந்தித்து வையுங்கள் என்று கூறியிருந்தேன்..
என்னவென்று நீங்களும் சிந்தித்து வைத்திருப்பீர்கள்..
அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம், தாய்தந்தையே நமது உலகம், என்ற வாழ்வியல் கோட்பாடு உள்ளதலவா? இந்த கருத்தை வலியுறுத்த படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் கற்பனயானதா? நிஜமானதா? என்று மட்டும் சிந்திப்பது பகுத்தறிவல்ல....
அந்தக் கதாபாத்திரங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் செய்தி என்ன? என்று சிந்திப்பதே பகுத்தறிவு.
இப்பொழுது ஐயப்பன் தொடர்பாக, இந்தப் பகுத்தறிவாளர்களின் கருத்து....
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் அதாவது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஐயப்பன். எப்படி ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும்? எனவே கடவுள் சம்ந்தப்பட்ட கதைகள் கற்பனை மட்டுமல நம்மை முட்டாளாக்கும் பொய்யான கதைகள்.
இவர்களின் பகுத்தறிவு இந்த அளவுக்குத்தான் வேலை செய்யும்...
ஆனால் ஐயப்பனின் பிறப்பில் ஒரு வாழ்வியல் கோட்பாடு உள்ளதே அதைப் பற்றி ஏன் இந்த பகுத்தறிவு சிந்திக்கவே இல்லை?
ஐயப்பனின் பிறப்பில் என்ன சார் வாழ்வியல் கோட்பாடு உள்ளது?
மகிஷி என்ற அரக்கியை அளிப்பதற்காக ஐயப்பன் அவதரித்தார். அதாவது மகிஷி என்ற அதர்மத்தை, மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவால் ஆசீர்வதிக்கப்பட்ட மகிஷி என்ற அதர்மத்தை அழிக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் (ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்கும் என்று யாரும் எதிர்பார்க்காத வகையில்) ஐயப்பன் என்ற தர்மம் பிறந்தது, அதர்மத்தை அழித்தது.
அதாவது நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற அளவுக்கு ஒருவ(ளி)னிடம் அதிகாரம் இருக்கும் பொழுது அவன்(ள்) அதர்மங்களை செயும்போது தர்மம் எந்த ரூபத்திலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் தோன்றி அவனை(ளை) அழிக்கும்.
எனவே மனிதர்களாகிய நாம் எந்த சூழ்நிலையிலும் அதர்மத்தை கடைபிடிக்கக் கூடாது. அதையும் மீறி அதர்மத்தை ஒருவன்(ள்) கடைபிடித்தால் அவனை(ளை) தர்மம் அழிக்கும்.......... என்ற வாழ்வியல் கோட்பாடு, எவ்வளவு அருமையான கோட்பாடு.
இதயெல்லாம் சிந்திக்காமல் "கடவுள் மறுப்புக் கொள்கை" என்ற முட்டாள்தனமான கொள்கையை கடைபிடிப்பதுதான் பகுத்தறிவா?
பகுத்தறிவே கொஞ்சம் சிந்திக்கவும்....
மீண்டும் அடுத்த பதிவில்..
1 comment:
அருமையான கோட்பாடு...
நல்ல கருத்துக்களுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment