பெரியாரிசம் (பதிவு 4)
இவர்களுடைய கடவுள்
மறுப்புக் கொள்கையினால் இன்னொரு இழப்பு என்ன?
சமஸ்கிருதம் என்ற ஒரு
மொழியை இன்று இழந்து நிற்கிறோம். காரணம் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் சொல்லி
வழிபட்டால்தான், வழிபாடு கடவுளைச் சேரும். என்ற பார்ப்பனீயக் கொள்கை தான். நானும்
கூட இதை மறுக்கிறேன். கடவுளை வழிபட சமஸ்கிருதம் தான் ஏற்ற மொழி என்பதை வன்மையாக
கண்டிக்கிறேன். நான் எந்த ஆலையத்திலும் அர்ச்சனை செய்வதில்லை. இறை வழிபாட்டிற்கு
மொழி ஏதும் தேவையில்லை. என்பதே சிறந்த கோட்பாடு. சமஸ்கிருதம் உனக்கு
பிடிக்கவில்லையா? விட்டுவிடு, உனக்கு பிடித்த மொழியை வைத்து வழிபடு.
இவர்களால் இன்று
சமஸ்கிருதம் மொழியில் இருந்த பல அறிய பொக்கிஷங்கள் அழிந்துவிட்டனவே? இவர்களால்
அவற்றை மீட்டுத் தரமுடியுமா? எவ்வளவு அறிவியல் விஷயங்கள் சம்ஸ்கிருத நூல்களில்
இருந்தது, கடவுள் மறுப்பு என்ற ஒன்றுமற்ற கொள்கையினால் ஒரு மொழியையும் அதில் உள்ள
பல அறிய தகவல்களும் இன்று காணாமல் போய்விட்டதே!!
சமஸ்கிருதம் என்பது
ஆரியர்களின் (பார்ப்பன) மொழி, எனவே அதை ஒழிக்கவேண்டும் என்ற மூடத்தனமான
கொள்கையினால் இன்று அந்த மொழி செத்துவிட்டதே!! உன்னால் அதை மீண்டும் உயிர்ப்பித்து
தர முடியுமா?
எந்த ஒரு விஷயமும்
100% தூய்மையானதும் இல்லை, 100% தீமையானதும் இல்லை. நண்மை தீமை இரண்டும் கலந்தே
இருக்கும். நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தீயவைகளை எப்படி நன்மையாக மாற்றவேண்டும்
என்பதை யோசிக்கவேண்டும். நான் முன்பே சொன்னதை இங்கு மீண்டு குறிப்பிட
விரும்புகிறேன். மிகப்பெரிய அழிவு சக்தியாகிய அணுசக்தியை மின்சாரம் தயாரிக்கவும்,
பாம்பின் விஷத்தைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தது போல.
பார்ப்பனீயத்தையும்,
சமஸ்கிருதத்தையும் அப்படித்தான் அணுகியிருக்க வேண்டும், பார்ப்பனீயத்தை
ஒழிப்பதைவிட திருத்தி அமைக்க வேண்டும் என்பதே சரியான கொள்கையாக கொள்கையாக
இருக்கும்.
தனக்குப் பிடிக்காத,
அல்லது தனக்குத்தெரியாத எதையும் ஒழிக்கவேண்டும் என்பதல்ல உண்மையான பகுத்தறிவு.
தனக்கு பிடிக்காதது
மற்றவர்களுக்கு பிடிக்க்க்கூடும் அல்லது பயன்படக்கூடும் எனவே அதை
பாதுகாக்கவேண்டும், அல்லது குறைந்தபட்சம் அழிக்கும் முயற்சியையாவது கைவிடவேண்டும்.
அதேபோல தனக்கு தெரியாத விஷயத்தை தெரியாது என்று
ஒப்புக்கொண்டு, அதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து தெளிய வேண்டும். இதுதான்
உண்மையான அல்லது சரியான பகுத்தறிவு.இன்னும் வளரும் ....
1 comment:
நல்லதொரு தொடர்... பாராட்டுக்கள் சார்...
விரிவான விளக்கங்கள்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
(தமிழ் பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றதால், கருத்திட்ட தாமதம்)
Post a Comment