Pages

Friday 17 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-4)



மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-4)



அன்பார்ந்த வாசகப் பெருமக்களே வணக்கம்,



இந்தப் பதிவில் 29-௦02-1976 அன்று காலை 11.00 க்கும் 02-03-1976 அன்று அதிகாலை 5.30 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை ஆராய்வோம்.



இந்த காலகட்டத்தில் குருவும் கேதுவும் ஒரே ராசியில் ஒன்றை நோக்கி ஒன்றாக அமைந்துள்ளது. அனால் இருவருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் சுமார் 210 இப்படியான அமைவு ஆண் பெண் இருபாலருக்கும் என்ன குறை இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பது கடினம்.

சுக்கிரன் செவ்வாய் திரிகோண அமைவு பெற்றிருக்கிறது எனவே இவ்விரண்டையும் தனியே வரிசைப் படுத்திப் பார்க்கும் போது சுக்கிரனை அடுத்து செவ்வாய் இருக்கிறது. இருவருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 120 பாகை. இப்படிப்பட்ட அமைவு பெண்ணுக்கு சூதக வலி (மாதவிடாயின் போது வயிற்றுவலி) ஏற்படும். ஆணுக்கு உற்பத்தி செய்யப்பட்ட விந்தணு தொகுப்பின் உயிர் தன்மை அல்லது வாழும் தன்மை குறைவாக இருக்கும்



இனி மேற்படி இரண்டு கால கட்டத்திற்கு இடைப்பட்ட காலத்தில் (௦01-03-1976 – 8.30 AM) பிறந்த ஒரு ஆணின ஜாதகத்தை ஆராய்வோம். (110 35’ வடக்கு ; 770 52’ கிழக்கு)



இந்த ஜாதகத்தில் உள்ள குரு சுக்கிரனை முன்பே பார்த்துவிட்டோம்.



இனி 3 ம் பாவம் ஆரம்பமுனையை (ரிஷபத்தில் 180 38’) ஆராய்வோம் 3 ம் பாவ ஆரம்ப முனை ரோகினி நட்சத்திரத்தில் உள்ளது. ரோகினியின் அதிபதி சந்திரன். சந்திரன், சூரியன், புதன், ராகு ஆகியவற்றுடன் திரிகோண அமைவைப் பெற்றுள்ளது.



இந்த நன்கு கிரகங்களையும் வரிசைப் படுத்த



புதன் 010 37’

சூரியன் 170 14’

சந்திரன் 180 44’

ராகு 210 32’ என்ற வரிசையில் அமைந்துள்ளது



இந்த அமைவின்படி 3 ம் அதிபதி சந்திரனும் ராகுவும் சுமார் 20 பாகை வித்தியாசத்தில் எதிர் எதிராக அமைகிறது. இந்த அமைவு ஆண் பெண் இருபாலருக்கும் சுக்கில சுரோணித உற்பத்தியில் குறை நிச்சயமாக இருக்கும். இந்த குறைபாடு மருத்துவத்தால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் தீர்க்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

No comments:

Post a Comment