மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-1)
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே இந்த பதிவில் 08-10-1978 அன்று காலை 6.00 க்கு மேல் 09-10-1978 / பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது 09-10-1978 அன்று இரவு 11.30 க்கு 110 30’ (வடக்கு) ; 770 52’ (கிழக்கு) பிறந்த ஒரு ஆணின ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஜாதகர் ஒரு ஆண், இவருக்கு லக்கினம் மிதுன ராசியில் 130 31’ 45” –ல் அமைந்துள்ளது.
சுக்கிரன் கேது சம்மந்தம் பற்றி முந்தய பதிவிலேயே பார்த்துவிட்டோம். அடுத்ததாக குரு-வை ஆராய்வோம்.
மேற்படி ஜாதகத்தில் குரு கடகத்தில் 130 8’ 53” ல் இருக்கிறார்.
குருவுக்கு அடுத்தபடியாக சனி இருக்கிறார். குரு சனி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நட்பு. மேலும் ஒரு ஜாதகத்தில் குரு சனியை சேர்ந்தாலும் சனி குருவை சேர்ந்தாலும் யோகமே. குழந்தை பாக்கியம் உண்டு. அதே சமயத்தில் சனியானவர் மந்தன் என்பதால் தாமதமாகத்தான் கிடைக்கும்.
அடுத்து மூன்றாம் பாவக ஆரம்ப முனை(கடகத்தில் 100 55’ 10”) நின்ற நட்சத்திரம் பூசம். பூசத்தின் அதிபதி சனி. இந்த சனிபகவானை ஆராயவேண்டும்.
சனிக்கு 5-ல் சந்திரன் இருக்கிறார். 9-ல் யாரும் இல்லை. எனவே சனி, சந்திரனை திரிகோண அமைவு கிரகங்களாக எடுத்துக்கொள்ளலாம். எனவே சனி சந்திரன் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை விகலை அடிப்படையில் வரிசை படுத்தி பார்க்கும் பொழுது
சனி (சிம்மத்தில்) 130 49’ 18” லும்
சந்திரன் (விருச்சிகத்தில்) 260 55’ 34” லும் இருக்கின்றனர்.
மூன்றாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி (சனி) விந்தணு உற்பத்திக்குக் காரணமாகிறார். என்பது தெரிந்ததே. இந்த சனிக்கு அடுத்து சந்திரன் இருப்பது - சனி சந்திரன் ஒருவருக்கு ஒருவர் பகை- இவருக்கு உற்பத்தியாகும் விந்தணு தொகுப்பு நீர்த்திருக்கும் அல்லது எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதை காட்டுகிறது.
அடுத்து ஐந்தாம் பாவக ஆரம்பமுனை (துலாத்தில் 140 56’ 32”) நின்ற நட்சத்திரம் சுவாதி. இதன் அதிபதி ராகு. இந்த ராகுவை ஆராய வேண்டும். பொதுவாக எந்த ஒரு பாவகத்தின் ஆரம்பமுனையும் ராகுவின் நட்சத்திரங்களில் (திருவாதிரை, சுவாதி, சதயம்) அமைவது அந்தந்த பாவகத்தை நசிக்கும். (திரிகோண அமைவு பெற்ற கிரகங்களை சம்மந்தப்பட்ட திரிகோண ராசிகளில் எந்தெந்த ராசிகளில் கிரகம் இருக்கிறதோ அந்தந்த ராசிகளில் பாகை கலை வரிசைப்படி அமைத்துக்கொள்ளலாம், கிரகங்கள் இல்லாத ராசியில் அமைக்கக் கூடாது. உதாரணமாக சனி சந்திரன் திரிகோண அமைவு பெற்ற கிரகங்கள் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். இந்த சனி சந்திரனை தனுசு மற்றும் சிம்மத்தில் அமைக்கலாம், மேஷத்தில் அமைக்கக்கூடாது.)
சனி சந்திரனை சிம்மத்தில் வைத்துப் பார்க்கும்போது சந்திரன் 260 55’ 34” ல் இருப்பதாலும் சந்திரனை அடுத்து (கண்ணியில்) ராகு 10 03’ ௦1” ல் இருப்பதாலும் ரகுவும் சந்திரனும் ஒன்றையொன்று எதிர் நோக்குகின்றனர். ராகுவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் பகை என்பதால் புதிர உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.
அடுத்து 2 மிட ஆரம்ப முனை (கடகத்தில் 110 6’ 15”) நின்ற நட்சத்திர அதிபதி சனி பகவான். சனிபகவானின் நிலைய முன்பே பார்த்துவிட்டோம் (ஏன் இரண்டாமிடத்தை ஆய்வு செய்ய வேண்டும்? குடும்பத்தில் புதிதாக சேரப்போகும் நபரை குறிப்பிடுவது இரண்டாமிடம், எனவே இரண்டாமிடத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்
இதுவரை மேற்குறிப்பிட்டுள்ள ஜாதகத்தை ஆய்வு செய்ததில்
அ) குரு 70% சாதகமாக இருக்கிறது. (சனி மந்தப் படுத்துவதால் - 30%) (தோராயமான மதிப்பீடுதான்)
ஆ) சுக்கிரன் சாதகமாக இல்லை
இ) மூன்றாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி சனி சாதகமாக இல்லை
ஈ) ஐந்தாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி ராகுவும் சாதகமாக இல்லை.
உ) இரண்டாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி சனி சாதகமாக இல்லை
எனவே இவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு தோராயமாக 15% முதல் 20%. மட்டுமே முறையான சிகிச்சை, வாய்ப்பை அதிகப்படுத்தும். வாய்ப்பை அதிகப்படுத்துவது காலத்தின் கையில்
வாழ்க வளமுடன்
அடுத்த பதிவில் இவருடைய மணைவி ஜாதகத்தை ஆய்வு செய்யலாம்....
No comments:
Post a Comment