மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-2)
கடந்த பதிவில் ஒரு ஆணின ஜாதகத்தை ஆய்வு
செய்தோம். இந்த பதிவில் அவருடைய மனைவியின் ஜாதகத்தை ஆய்வு செய்வோம் என்று
குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு முன்பாக இந்தப் பெண் பிறந்ததற்கு
முன்பின் நாட்களில் பொதுவான (லக்கினமில்லாமல்) கிரக அமைப்பைப் பார்க்கலாம்.
அதாவது
17-12-1978 அன்று பிற்பகல் 2-00 க்கு ஒரு கட்டமும் 19-02-1978 அன்று இரவு 11.00
க்கு ஒரு கட்டமும் தந்திருக்கிறேன்.
குரு சுக்கிரன் இருவரும் புதன் சூரியன் செவ்வாய்
சந்திரன் ஆகிய கிரகங்களுடன் திரிகோண அமைவு பெற்றுள்ளதை கவனிக்கவும். இவர்கள்
அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை அடிப்படையில் வரிசைப்படுத்தி பார்க்கும்
பொழுது கீழ்க்கண்டவாறு அமையும்.
17-02-1978 / 2.00.PM 19-02-1978
/ 11.00.PM
சந்திரன் (மிதுனத்தில்) 000 28’ குரு (மிதுனத்தில்) 030
46’
குரு (மிதுனத்தில்) 030 47’ சூரியன் (கும்பத்தில்) 070
14’
சூரியன் (கும்பத்தில்) 040 50’ புதன் (கும்பத்தில்) 120
23’
புதன் (கும்பத்தில்) 080 18’ சுக்கிரன் (கும்பத்தில்) 120
39’
சுக்கிரன் (கும்பத்தில்) 090 40’ செவ்வாய் (மிதுனத்தில்) 270 43’
செவ்வாய் (மிதுனத்தில்) 280 19’ சந்திரன் (மிதுனத்தில்) 290 06’
என்ற வரிசையில் கிரகங்கள் அமைந்திருக்கும்.
குருவுக்கும் சூரியனுக்கும் இடையில் குறைந்த
பட்சம் 1 பாகையும் அதிகபட்சம் 3½ பாகை வரையும் வித்தியாசம் இருக்கிறது.இப்படியான அமைப்பை நாடி விதிப்படி
சூரியனில் அஸ்தங்கம் என்று கூறப்படும். குரு அஸ்தங்கம் ஆனதால் குரு வலிமை குன்றி
இறக்கிறார்.
இப்படியான அமைவு ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த
ஜாதகர் ஆணாக இருந்தால் சுக்கிலம் புத்திர உற்பத்திக்கு ஏற்ற வகையில் இருக்காது.
இந்த குறைபாட்டை கண்டுபிடிப்பது கடினம்.
அடுத்து சுக்கிரனை ஆராய்வோம். சுக்கிரன் சதய
நட்சத்திரத்தில் இருக்கிறது. சதயம் ராகுவின் நட்சத்திரம் ஆகும். சுக்கிரன் அடுத்து
செவ்வாய் இருக்கிறது. ராகு மற்றும் செவ்வாய் சுக்கிரனுக்கு நட்பு கிரகங்களே
ஆனாலும் இந்த அமைவு ஆணுக்கு சுக்கில உற்பத்தி, பெண்ணுக்கு சுரோணித உற்பத்தி,
கர்ப்பப்பை கோளாறு கண்டுபிடிக்க சற்று கடினமான அளவில் இருக்கும். லக்கினப்படி
ஆராய்ந்தால் இன்னும் கூடுதலான தகவல் கிடைக்கும்.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment