மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-3)
அன்பான வாசகப் பெருமக்களே வணக்கம்.
கடந்த பதிவில் ஒரு பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு
செய்யலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன்.
17-12-1978 அன்று பிற்பகல் 2-00 க்கும் 19-02-1978 அன்று இரவு 11.00 க்கும் இடைப்பட்ட காலத்தில் 770
54’ (கிழக்கு) ; 110 46’ (வடக்கு) இந்தப் பெண் பிறந்திருக்கிறார்.
ஐந்தாம் பாவ ஆரம்ப முனை மிதுனத்தில் 120
47’ ல் அமைந்துள்ளது. அதாவது திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இந்த
ராகுவுடன் திரிகோண அமைவு பெற்ற கிரகங்கள் எதுவும் இல்லை. மேலும் ராகு அடுத்துள்ள
சனியை நோக்கி நகர்கிறார். சனி ராகுவுக்கு நட்பு கிரகம் எனவே ராகு கெடவில்லை என்ற
முடிவுக்கு வந்துவிட முடியாது. காரணம் ராகு கண்ணியில் அஸ்த்தம் நட்சத்திரத்தில்
இருக்கிறார். அஸ்த்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். ராகுவும் சந்திரனும்
ஒருவருக்கு ஒருவர் பகை.
அடுத்து குடும்பத்திற்கு புது வரவை குறிக்கும் 2
மிடத்தை ஆராய்வோம்.
இந்த ஜாதகத்தில் 2 மிடம் ஆரம்ப முனை மீனத்தில்
(160 49’ ல்) ரேவதி நட்சத்திரம் 1 ம் பாதத்தில் அமைந்துள்ளது. ரேவதியின் அதிபதி புதன்.
இந்த புதன், சூரியன், குரு, சந்திரன், சுக்கிரன் செவ்வாய் ஆகிய கிரகங்களுடன்
திரிகோண அமைவு பெற்றுள்ளது. இவற்றை அந்தந்த ராசிகளில் கடந்துள்ள பாகை கலை
அடிப்படையில் வரிசைப் படுத்த
குரு (மிதுனத்தில்) 030
47’
சூரியன் (கும்பத்தில்) 050
33’
சந்திரன் (மிதுனத்தில்) 090
03’
புதன் (கும்பத்தில்) 090
31’
சுக்கிரன் (கும்பத்தில்) 100
34’
செவ்வாய் (மிதுனத்தில்) 280 09’ என்று அமையும்.
இந்த வரிசைப்படி புதன் சந்திரன் இருவரும் ஒரே
பாகையில் சில விகலை இடைவெளியில் அமைந்துள்ளது. இந்த அமைவு சந்திரனுடன் சமாஹம நிலை
எனப்படும். புதன் சந்திரன் இருவரும் பகையாக இருந்து, புதன் சந்திரனுடன் சமாஹம
நிலையையும் அடைந்துள்ளதாலும், சூரியனில் சுமார் 4 பாகை இடைவெளியில் புதன்
அஸ்தங்கமும அடைந்துள்ளதாலும் குடும்பத்திற்கு ஒரு புதிய சேர்க்கை ஏற்படுவதில் தடை
உள்ளது.
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment