Pages

Friday, 7 September 2012

பெரியாரிசம்.......(பதிவு 10 )

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே, இந்த பெரியாரிசத்தை சற்று வித்தியாசமாக “வழக்காடு மன்றம்”  வடிவில் அலசலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது, எனவே........

வழக்காடு மன்றம்....

வழக்கு தொடுப்பவர் : ஞானசூனியன்.

வழக்கை மறுப்பவர் : ஆளவந்தான்.

இடம் : மக்கள் மன்றம்.

நடுவர் : மக்கள்.

வழக்கு விபரம் : சுயமரியாதை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என்ற அருமையான கொள்கைகளை கேவலப்படுத்திய ஈ.வெ.இராமசாமி நாயக்கர் குற்றவாளியே....

விசாரணை நாள் (1)

நடுவர் : ஈரோடு வெங்கட்ட ராமசாமி என்பவர் பின்னாளில் தந்தை பெரியார் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஒருவர் மீது ஒரு வழக்கு வருகிறதென்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இம்மக்கள் மன்றம் கருதுகிறது. மக்கள் மன்றம் முன் அனைவரும் சமமே என்ற கோட்பாட்டின்படி இந்த வழக்கை விசாரிக்க இம்மக்கள் மன்றம் தீர்மானிக்கிறது. எனவே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே உங்கள் வழக்கை பதிவு செய்யுமாறு அழைக்கிறோம்.

ஞானசூனியன் : மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, எனது வழக்கு ஈ.வெ.ரா அவர்கள்மீது பல குற்றச்சாட்டுகளை கொண்டது. எனவே ஒவ்வொரு குற்றச்சாட்டாக எடுத்துரைக்க அனுமதி வேண்டுகிறேன்.

நடுவர் : அனுமதி அளிக்கப்படுகிறது.

ஞானசூனியன் : கணம் நடுவர் அவர்களே எனது முதல் குற்றச்சாட்டு. “அனைவருக்கும் சுயமரியாதை தேவை என்பதை தனது கொள்கையாக பிரகனப்படுத்திக்கொண்ட ஈ.வெ.ரா அவர்கள் கேரளாவில் வைக்கம் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்டோரின் சுயமரியாதையை அடகு வைத்தவர்தான் இந்த ஈ.வெ.ரா. எனவே இவரை நான் குற்றவாளி என்று குற்றம் சாட்டி மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தியிருக்கிறேன்.

நடுவர் : வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே இந்தக் குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து மற்றும் மறுப்பு ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.

ஆளவந்தான் : வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் எனது கட்சிக்காராகிய நாடு போற்றும் “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை எந்த மரியாதையும் இல்லாமல் வெறுமனே ஈ.வெ.ரா என்று குறிப்பிட்டதிலிருந்தும், கேரளாவில் வைக்கத்தில் நடந்த தீண்டாமை கொடுமையையும், சாதிக் கொடுமையையும் அறியாமல் “பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்மீது இப்படியொரு குற்றச்சாட்டை வைத்ததிலிருந்தும் எனக்கு ஒன்று உறுதியாகத் தெரிகிறது.

நடுவர் : என்ன அது?

ஆளவந்தான் : அவருடைய பெற்றோர்கள் அவருக்கு மிகச்சரியாக பெயர் சூட்டியுள்ளார்கள் என்பதும், அந்தப் பெயருக்கேற்றபடி தன்னை வெளிப்படுத்திக்கொண்டதும் உறுதியாகத் தெரிகிறது.

நடுவர் : தனிமனித விமரிசனம் தேவையில்லை. வழக்கு சார்ந்த உங்கள் கருத்தையும் மறுப்பையும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

ஆளவந்தான் : கணம் நீதிபதி அவர்களே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் வைக்கம் வரலாறு தெரியாமல் இப்படி பிதற்றுகிறார். அவருக்காக அந்த வரலாற்றை இங்கு எடுத்துரைக்க அனுமதி வேண்டுகிறேன்.

நடுவர் : அனுமதி அளிக்கப்பட்டது.

ஆளவந்தான் : திரு வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே கவனமாகக் கேளுங்கள். கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் பின்னாளில் திருவாங்கூர் என்று மாற்றப்பட்ட நகரில் உள்ள கோயில்களில் தீண்டாமை கொடுமை நிலவியது. கோயில்களில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கோயில் இருக்கும் விதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்) போராட்டம் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரகள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார்.
        இதுமட்டுமல்ல “வெண்தாடி வேந்தன் “பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, எத்துனை எத்துனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார் தெரியுமா? இந்த நாடே அறியும். இப்படி நாடறிந்த ஒரு பெருந்தலைவரை, புரட்சி சிந்தனையாளரை, தத்துவ மேதையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள்.
        எனவே திரு வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் இந்த குற்றச்சாட்டை திரும்பப் பெறவேண்டும். அல்லது மக்கள் மன்றம் இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து ஞானசூனியன் அவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.

நடுவர் : வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களை “குற்றச்சாட்டை திரும்பப்பெற வேண்டும் என்றுகேட்க வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களுக்கு உரிமை உண்டு. குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யுமாறு எங்களுக்கு உத்தரவிட வழக்கறிஞர்  ஆளவந்தான் அவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. எதிர்தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல், குற்றச்சாட்டை தீர விசாரிக்காமல் எப்படி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யமுடியும்? எனவே குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதற்கில்லை. வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே உங்கள் குற்றச்சாட்டை தெளிவாகக் கூறவேண்டும்.

ஞானசூனியன் : மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, “வெண்தாடி வேந்தன் “பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். இந்த நாடே அறியும். இப்படி நாடறிந்த ஒரு பெருந்தலைவரை, புரட்சி சிந்தனையாளரை, தத்துவ மேதையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை நான் முன்வைத்திருப்பதாகவும், எனவே என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்கள் என்மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

        ஈ.வெ.ரா அவர்களின்மீது என்னால் சாட்டப்பெற்ற குற்றச்சாட்டிற்கு நான் விளக்கம் தர கடமைப்பட்டிருக்கிறேன். வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே ஈ,வெ.ரா அவர்களைப்பற்றி அதாவது வைக்கம் போராட்டத்தைப் பற்றியும் மற்றும் பல போராட்டங்களைப் பற்றியும் நன் நன்கு அறிவேன். இந்த நாடே அறியும். ஆனால் அந்த வைக்கம் போராட்டத்தின் விளைவு என்ன? என்பதுதான் இங்கு நான் வைக்கும் குற்றச்சாட்டு.

நடுவர் : வைக்கம் போராட்டத்தின் விளைவு இந்த நாடே அறிந்த விஷயம்தானே? தாழ்த்தப்பட்ட தலித்துகள் கோயிலுக்குள் நுழைய இருந்த தடை விலக்கப்பட்டதே? இதில் என்ன குற்றம் இருக்கமுடியும்?

ஞானசூனியன் : மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே,  விளக்கமாக கூறுகிறேன்.. இன்று திருவாங்கூர் என்றழைக்கப்டும் வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகிய தலித்துகள் கோவிலுக்குள்ளே நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேலும்  கோவில் இருக்கும் வீதியில் கூட தலித்துகள் நடக்கக்கூடாது என்றும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதற்காக போராட்டம் நடத்தியது, பார்ப்பனர்களின் கோயிலுக்குள் எனதுமக்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று போராடியது, அந்தப் போராட்டத்தில் தலித்துகளின் தன்மானத்தை, சுயமரியாதையை அடகு வைத்தது இவையெல்லாம் குற்றமில்லையா?
        இன்னும் விளக்கமாக கூறுகிறேன். சுயமரியாதை என்றால் என்ன? தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் அடுத்தவர்களிடம் தன்னிடம் இல்லாத ஒன்றை கேட்காமலிருப்பதும், அப்படி தன்னிடம் இல்லாததை தானே சுயமாக சம்பாதித்துக்கொல்வதுமே, சுயமரியாதை. ஈ.வெ.ரா. அவர்கள் தனது மக்களை பார்ப்பனர்கள் கோயிலுக்குள் அனுமதிக்காததற்கு அவர்களிடம் ஏன் போராடவேண்டும்? மாறாக தலித்துகளிடம் உங்களுகென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள், அந்த கோயிலுக்கு நீங்களே பூசாரியாக இருக்கலாம், விருப்பப்பட்டால் பார்பனர்கள் அங்கு வரட்டும், நீங்கள் தடுக்காதீர்கள், கடவுள்முன் அனைவரும் சமமே எனவே நீங்கள் உங்கள் தன்மானத்தை விட்டு பார்பனர்களிடம் அனுமதி வேண்டி போராடுவதை விட்டுவிட்டு உங்களுக்கென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள். அது சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, இறைவன் கோபித்துக்கொள்ளமாட்டார், ஏனென்றால் உங்கள் உள்ளம் பார்ப்பனக் கோயில்களைவிடப் பெரியது, மேலும் கோயிலுக்குள் நுழைய பார்ப்பனன் அனுமதித்தாலும் கடவுளை பார்க்கத்தான் முடியுமே தவிர, அவருக்கு நீ பூசை செய்யமுடியாது. (இன்றளவிலும் அதுதான் நடைமுறை.) ஆனால் உங்களுகென்று நீங்கள் கட்டிக்கொள்ளும் கோயிலில் நீங்களே பூசாரியாக இருக்கலாம். “எலி வலையானாலும் தனிவலைசிங்கத்திற்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இருப்பதே சுயமரியாதை, தன்மானம் என்று கூறி தலித்துகளின் தன்மானத்தை வலுப்படுத்தியிருக்கவேண்டும் மாறாக பார்ப்பனர்களிடம் தலித்துகளின் தன்மானத்தை அடகு வைத்து விட்டு, தலித்துகளையும் கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும், என்று போராடியது குற்றமே. இந்த அடிப்படையில் ஈ.வெ.ரா குற்றவாளியா? இல்லையா?

நடுவர் : வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே, வழக்கறிஞர் ஞானசூனியன் மிகக்கடுமையான குற்றச்சாட்டை திரு ஈ.வெ.ரா அவ்ர்களிமீது சுமத்தியுள்ளார், எங்களைப் பொருத்தவரையில் இவர் குற்றச்சாட்டில் நியாயம் இருபதாகத் தோன்றுகிறது, இது குறித்து நீங்கள் மேலும் ஏதாவது கருத்தோ, மறுப்போ தெரிவிக்க விரும்புகிறீரா?

ஆளவந்தான் : கணம் நீதிபதி அவர்களே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

நடுவர் : வழக்கறிஞர்கள் ஞானசூனியனின் மற்றும் ஆளவந்தான் ஆகிய இருவரின் கருத்துக்களையும் இம்மன்றம் பதிவு செய்துகொண்டுள்ளது

இம்மன்றம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment