Pages

Wednesday 21 September 2011

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு??????? (தொடர்ச்சி 1)

முந்தைய பதிவு



எல்லாம் அவன் செயல்.....

அவனன்றி ஓர் அணுவும அசையாது....

இறைவனே கர்த்தா. நாம் வெறும் கருவியே.....

பம்பரத்தைச் சுற்றும் சாட்டை அவனே. நாம் வெறும் பம்பரம்தன்....

பொம்மலாட்டத்தின் சூத்திரதாரி இறைவனே. நாம் வெறும் பொம்மைகள் தான்....

நமதென்று எந்த செயலும் கிடையாது. அனைத்தும் அவன் திருவிளையாடலே...

இவையெல்லாம் உண்மையா???

அவன்தான் நம்மை ஆட்டுவிக்கிறானா???

நாம் வெறும் கருவிதானா???

நமக்கென்று சுயமாக எந்த செயலும் கிடையாதா???

இப்படி இன்னும் நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்...

அனைத்து செயல்பாடுகளுக்கும், அனைத்துநிகழ்வுகளுக்கும் கரணம் இறைவன் என்றால் உலகில் நிகழும்

அனைத்து அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டியவராகிறார்.

ஒரு சிலரை நல்லநிலையில் ஆரோக்கியமாகவும், இன்னொரு சிலரை ஆரோக்கியமற்றவராகவும்

படைப்பது இறைவன் என்றால் ....இது எந்த விதத்தில் நியாயம்???

ஒருசிலரை செல்வந்தர்களாகவும், இன்னொரு சிலரை ஏழ்மை துன்பத்தில் வாடுபவர்களாகவும் படைத்தது

இறைவன் என்றால்.... அவனுக்கு ஏன் இந்த பாகுபாடு???

இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்று

சொல்வதெல்லாம்...........

இறைவன் கருணை உள்ளவனாக, தருமவானாக இருந்தால் இப்படியெல்லாம் செயல்படுவாரா???

இப்படிப்பட்ட கேள்விக் கணைகளை தாங்க முடியாது என்ற காரணத்தினால்தான் இறைவன்

யார்கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து இருக்கிறாரா???

இங்கு இரண்டு புராணக்கதைகளை நிணைவு படுத்த விரும்புகிறேன்.

கதை 1

முனிவர் ஒருவர் தனது ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்..

ஒருநாள் அவர் கிழிந்து போன தனது ஆடையை தைத்துக் கொண்டிருந்தார்.

இப்படி தவத்தில் சிறந்த முனிவர் ஆடை கிழிந்து அதை தைத்து அணியும் அளவிற்கு ஏழ்மையில்

இருப்பதைக் கண்ட இறைவன் முனிவர் முன்பு தோன்றி "அப்பனே உனக்கு வேண்டிய வரத்தை

தருவதற்காகவே வந்திருக்கிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

இந்த முனிவரோ "இறைவா!!! தங்களின் வருகைக்கும். அடியேனுக்கு வேண்டும் வரம் தர இருப்பதற்கும்

மிக்க நன்றி. ஆனால் தனக்கு எந்தக் குறையும் இல்லை.அதனால் எனக்கு எதுவும் தேவைப் படவில்லை.

எனவே தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்." என்று இறைவனிடம் கூறினார்.

ஆனால் இறைவனோ விடவில்லை.

"மகனே நான் எவர முன்பாவது தோன்றினால் வரம் கொடுக்காமல் போக மாட்டேன். எனவே உனக்கு

வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

முனிவருக்கு என்ன வரம் கேட்பது என்று புரியவில்லை.

வேறுவழியில்லாமல் ஒருவரத்தைக் கேட்டார்.

"இறைவா நான் எனது கிழிந்த ஆடையை ஊசியில் நூலை கோர்த்து தைத்துக் கொண்டிருக்கிறேன்.

இது போல நான் தைக்கும் போதெல்லாம், ஊசியின் பின்னாலேயே நூலும் வரவேண்டும்."

என்று கேட்டார்.

ஏற்கனவே ஊசியின் பின்னால்தானே நூல் வந்துகொண்டிருக்கிறது, இதில் நான் வரம் தந்து ஆவது எதுவும்

இல்லையே! என்றார்.

உடனே முனிவரும் "இறைவா இதுமட்டுமல்ல எல்லாமே இப்படித்தான் நிகழ்கிறது. இதில் நீங்கள்

செய்வதற்கு என்ன இருக்கிறது??? என்று முனிவர் திருப்பிக் கேட்டதும் இறைவன் மறைந்தார்.

கதை 2

ஒரு முனிவர் தவமிருந்தார். அவரின் தவத்தை மெச்சி இறைவன் காட்சி தந்து வேண்டும் வரத்தைக் கேள்

என்றார். முனிவரும் தனக்கு குறை ஏதும் இல்லை எனவே தன்னை மன்னிக்கும்படி இறைவனை

வேண்டினார். இறைவனும் தான் வரம் தந்தே ஆகவேண்டும் என்று நிற்கிறார்.

வேறுவழி இல்லாமல் முனிவரும் ஒரு வரம் கேட்டார்.

முனிவருடைய இடது முழங்காலில் ஒரு தழும்பு இருந்தது. அதை தனது வலதுகாலுக்கு மாற்றித் தருமாறு

கேட்டார்.

உடனே இறைவன் "மகனே இது உன்னுடைய பிராப்த கர்மாவால் உருவானது. என்னால் மாற்ற முடியாது

என்று கூறி மறைந்தார்.

மேற்படி இரண்டு கதைகளும் இறைவன் சக்தி அற்றவன் என்று கூறுகின்றனவா???

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று கூருகின்றனவா???

விதியையும் பிராப்ததத்தையும் மாற்றியமைக்க இறைவனால் கூட முடியாது என்று கூருகின்றனவா???

இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் தான் என்ன????

அடுத்தப் பதிவு

அன்புடன்

2 comments:

Sankar Gurusamy said...

நல்ல சுவாராசியமான அல்சல்... தொடருங்கள்...

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

ALAVANDHAN (ஆளவந்தான்) said...

வாழ்க வளமுடன்

திரு சங்கர் குருசாமி உங்கள் வருகைக்கு நன்றி,

உங்களின் பகிர்வுக்கு நன்றி.

அன்புடன்.....

Post a Comment