Pages

Wednesday, 21 September 2011

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு???????



அனைவருக்கும் வணக்கம்.


இங்கு நான் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் ஒரு கருத்தை சமர்ப்பிக்கிறேன்.

இங்கு நான் சமர்பிக்கும் கருத்துக்கள் யார்மனத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்பதை

பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆன்மீகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு,

என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி விஷயத்திற்கு வருகிறேன்.

விதியை வெல்ல முடியுமா? அல்லது எல்லாமே விதிப்படிதான் நடக்குமா?

ஆன்மீகத்திற்கும், விதி, கர்மா போன்றவைகளுக்கும் சம்மந்தம் இல்லை என்றால், பெரும்பாலானோர்

ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆனால் ஜோதிடத்திற்கும், விதி,கர்மா இவைகளுக்கும் தொடர்பு உண்டு, என்றால் யாரும் மறுக்கவும்

மாட்டார்கள்.

பொதுவாக நாம் அனைவருமே தங்களுடைய கர்ம வினையிலிருந்து, அல்லது ஜாதகப்படி உள்ள தீய

விதியிலிருந்து விடுபடுவதற்காக தங்களால் முடிந்த அளவுக்கு பரிகாரங்கள் செய்துவருகிறோம்.

அதாவது நமக்கு வேண்டிய நன்மைகளை இறைவனை பிரார்த்தனை செய்து அடைந்துவிடுவதாகவும்

அதற்க்கு நன்றிக்கடனாக நாம் ஏதாவது பரிகாரத்தையோ, காணிக்கையா நேர்த்திக்கடனாக

செய்துவிடுகிறோம்

அதாவது இறைவன் அருளால் நமது தீவினைகள்(பாவங்கள்) தீர்க்கப் படுகின்றன என்பது நம்மில்

பெரும்பாலானோர் கோட்பாடு.

இதில் நியாயம் இருக்கிறதா?

இந்தக் கேள்வியை ஒரு உதாரணத்துடன் கேட்டால், இந்தக் கேள்வியில் உள்ள நியாயம் புரியும்.

கொலைக குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவனுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது
(இன்னும் வழங்கப்படவில்லை)

இந்த சமயத்தில் குற்றவாளி நீதிபதியிடம் " அய்யா நான் கொலை செய்தது உண்மைதான். நீங்கள்

பெரியமனது வைத்து என் குற்றத்தை மன்னித்து என்னை விடுதலை செய்ய வேண்டும். நானும் எனது

குடும்பத்தாரும் உங்களை எங்கள் குலதெய்வமாக வணகுவோம். மேலும் உங்களுக்கு நன்றிக்கடனாக

(நேர்த்திக்கடனாக) எனது சொத்தில் பாதியை உங்களுக்கு தந்துவிடுகிறேன். அரசாங்கத்திற்கும் ஒரு

தொகையை அபராதமாக செலுத்திவிடுகிறேன். தயவுசெய்து என்னை விடுதலை செய்து காப்பாற்றுங்கள்.

என்று கேட்டால்...

நீதிபதியும் குற்றவாளியின் பிரார்த்தனையை ஏற்று, சரி உன்னை மன்னித்து விடுகிறேன். நீயும், நீ கொடுத்த

வாக்கை காப்பாற்று. என்று சொன்னால்....

இதுபோல எத்தனையோ அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் அவர்களுடைய துதிபாடிகளுக்குத்

தேவையான நன்மைகளை செய்தால்....

அதாவது பிழைக்கத் தெரிந்தவர்கள் துதிபாடி (மாமூல் பாடி) பிழைத்துக் கொள்வதும். மற்றவர்கள்

துன்பப்படுவதும் ......

இறைவனிடத்தும் இதே அணுகுமுறைதானா???

பரிகாரங்கள் பிரார்த்தனை செய்தால் இறைவன் நமக்கு நன்மை செய்வாரா???

பரிகாரங்கள் பிரார்த்தனை செய்யாவிட்டால் நமது துன்பத்தை கலையமாட்டாரா??? துன்பங்கள் தொடருமா???

இறைவனும் தற்கால அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் போலத்தான் செயல்படுகிறாரா???

நமக்கு வாழ்வில் நல்லவைகள் நடக்கவேண்டுமானால், இறைவனை பிரார்த்தனை செய்து,

அபிஷேக ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து, இப்படி இன்னும் பலவாறாக இறைவனை மகிழ்விக்க

வேண்டுமா???

இந்த இடத்தில் ஒரு வேடிக்கையான (அனைவருக்கும் தெரிந்த) கதையை .....

ஒரு புலவர் தனது வறுமையை போக்க அரசனிடம் சென்றார். மன்னனைப் புகழ்ந்து ஒரு கவிதை பாடினார்.

மன்னனும் மனமகிழ்ந்து இந்த அருமையான கவிதை 1000 பொன் பரிசளிக்கத் தகுந்தது என்று கூறினார்.

புலவரும் மகிழ்சியடைந்து மேலும் ஒரு அழகான கவிதையை பாடினார். அரசனும் மனமகிழ்ந்து

பரித்தொகையை கூட்டினார். இப்படி புலவர் பாடப்பாட மன்னனும் பரிசுத்தொகையை கூட்டிக்கொண்டே

போனதில் பரிசுத்தொகை புலவருக்குத் தேவையான அளவுக்கு வந்ததும் புலவர் பாடுவதை நிறுத்தினார்.

புலவர் பரிசுக்காக காத்திருந்தார்.

மன்னன் சரி புலவரே போய்வாருங்கள் என்று கூறினார்.

புலவர் சற்று அதிர்ச்சியுடன், மன்னா, பரிசில் பொன்.... என்று மெதுவாக இழுத்தார்.

மன்னனும், ஓ.. அதுவா? நீர் என்னை மகிழ்விக்க ஏதேதோ பாடினீர், நானும் உம்மை மகிழ்விக்க ஏதேதோ

சொன்னேன். இரண்டுக்கும் சரியாகிவிட்டது. நீர் போகலாம். என்று கூறி வழியனுப்பினார்.

இப்படி இறைவனும் செய்தால் நாம் இறைவனை ஏற்றுக்கொள்வோமா???

புகழ்ச்சிக்கும், வேண்டுதல்களுக்கும் மயங்கும் சாதாரண மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன

வித்தியாசம்.???

ஊழல பேர்வழிகளுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்???

சபலபுத்தி கொண்ட சராசரி மனிதனுக்கும் என்ன வித்தியாசம்???

இறைவனின் நிலைதான் என்ன???

நமக்கு நல்வினைகளையும் பிராப்தங்களையும் இறைவனிடம் பிரார்த்தித்து (யாசித்து) பெறவேண்டுமா?

அவராக மனமிறங்கி நமக்கு (தன் குழந்தைகளுக்கு) நமை செய்ய மாட்டாரா???

நமக்கும் இறைவனுக்கும் உள்ள பந்தம் இவ்வளவுதானா?

இப்படி எதோ ஒன்று மனதை நெருடுகிறதே????

நிச்சயமாக இறைவனைப் பற்றிய மேற்படி வியாய்க்கியான விஷயங்கள் எதுவும் உண்மையாக இருக்க

முடியாது.என்பதுமட்டும் உண்மை.

அப்படியென்றால் உண்மை என்ன???????

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உண்மையான பந்தம் என்ன??????????


அடுத்த பதிவு

அன்புடன்....

No comments:

Post a Comment