Pages

Friday, 30 September 2011

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு?????? தொடர்ச்சி (2)

முந்தையப் பதிவு



இறைவனை கடவுள் என்றும் குறிப்பிடுவதுண்டு.

கடவுள் என்றால் அனைத்தையும் கடந்து நிற்றல், என்று சிலர் கூறுகின்றனர்.

அதாவது அனைத்தையும் கடந்து (துறந்து) நிற்பதுதான், துறவு கொள்வதுதான் கடவுள் தன்மையா?

இன்னும் சிலர் கடந்து உள்ளே செல்லுதல் என்று கூறுகின்றனர்.

இப்படி தன்னைகடந்து உள்ளே செல்லுதல் என்பது சமாதி நிலை ஆகும்.

எந்தவிதமான செயல்பாடு இல்லாத சமாதி நிலைதான் இறைத்தன்மையா????

இன்னும் சிலர்

கடந்து செல்லுதல் என்பது துறவரத்தையோ, சமாதி நிலையையோ குறிப்பதல்ல,

இப்பூவுலகமானது திடபொருளாக, ஸ்தூல (பஞ்சபூத) அம்சமாக இருக்கிறது.

இது அனைவருக்குமே பொதுவான விஷயம்.

இப்பூவுலகில் வாழும் மனிதர்களாகிய நம் அனுபவங்கள் மாறுபடுகின்றன.

எனவே உலகம் என்பது திடபொருளாக, ஸ்தூல (பஞ்சபூத) அம்சமாக இருந்தாலும், ஒவ்வொரு

தனினபரைப் பொருத்தவரை அவருடைய மனம் சார்ந்த அம்சமாக இருக்கிறது.

ஆகவே கடந்து செல்வது என்பது மனதோடு தொடர்புடையது.

அதாவது மனதை கடந்து அல்லது ஊடுருவி செல்வது.

அதாவது எதிலும் தங்கியிருக்காத நிலை என்று கடவுள் பற்றி விளக்கம் தருகிறார்கள்.

இன்னும் சிலர் கடவுள் நம்முள்ளேதான் இருக்கிறது. என்றும் கூறுகிறார்கள்.

இப்படி கடவுளைப்பற்றி ஏராளமான கருத்துக்கள் உள்ளன.

ஒவொன்றையும் தனித்தனியாக யோசிக்கும்போது எல்லாமே சரியாகவே இருக்கிறது.

ஆனாலும் இத்துடன் நாம் திருப்தி அடைந்துவிட முடிகிறதா???

மற்றவர்களின் அறிவுப்பூர்வமான விளக்கங்களும், அனுபவங்களும் நம்மை திருப்தி படுத்திவிடுமா???

அதாவது கடவுள் என்பது மனம் சார்ந்த ஒன்று என்றால், கடவுள் வெறும் மனக்கற்பிதம் என்று கூறிவிட

முடியுமா???

அவரவர் அனுபவத்தால்தான் உணரமுடியும் என்றால், அனுபவங்கள் எல்லாம் முழுக்க முழுக்க உண்மை

என்று கூறிவிடமுடியாது. அதே சமயத்தில் அனுபவங்களை நிரூபிக்க முடியாது.

நிரூபிக்க முடியவில்லை என்பதாலேயே பொய் என்றும் கூறிவிடமுடியாது.

இந்த இடத்தில் மூன்று நிலைப்பாடு இருக்கிறது.

1) கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று மறுப்பவர்கள்.

இவர்களுடைய கருத்துக்கள் அனைத்தும் கடவுள் இருக்கிறது என்று கூறுபவர்களை மறுதளிப்பதாகவோ,

விமர்சனம் செய்வதாகவோ தான் இருக்கும்.

இவர்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டுகொள்ளத் தேவையில்லை.

காரணம் இல்லவே இல்லை என்ற எதிமறை கொள்கை உடையவர்கள்

அதாவது முடிவை முன்கூட்டியே நிர்ணயித்துவிட்டு ஒரு ஆய்வை மேற்கொள்ளும்போது அந்த முடிவுக்கு

மேல் ஆய்வு செய்ய முடியாது.

2) கடவுள் இருக்கிறது, இதற்க்கு மேல் நான் "கடவுளுக்கு எதிரான எந்த விதமான சிந்தனைக்கும்

ஆய்வுக்கும் இடம் இல்லை" என்று கூறுபவர்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை.

காரணம் இவர்களும் தனக்கேற்பட்ட சில (நிரூபிக்க முடியாத) அனுபவங்களை மட்டுமே வைத்துக் கொண்டு

தங்களுடைய நிலைப் பாட்டிலிருந்து மாற முடியாதவர்கள்.

கடவுள் இருக்கிறது என்றோ, இல்லை என்றோ ஒரு முடிவை எடுத்துவிட்டு எப்படி ஆய்வை செய்வது???

நாம் ஒரு முடிவை எடுத்துவிட்டு ஆய்வு செய்வோமானால், நமது முடிவுக்கு அப்பால் நமது ஆய்வு

செல்லாது. ஒரு கயிற்றில் கட்டப்பட்ட மாடு ஒரு எல்லைக்குள் மட்டுமே மேய முடியும். அதற்க்கு அப்பால்

செல்ல முடியாது.

எனவே மூன்றாம் நிலைப்பாட்டிளிருக்கும் நாம் ஆய்வை தொடருவோம்.

அதென்ன சார் மூன்றாம் நிலைப்பாடு???

இறைவன் இருக்கிறான். ஆனால்

1) எப்படி இருக்கிறான்???

2) அவன் வேலை என்ன???

3) அவனுக்கும் நமக்கும் இடையே உள்ள பந்தம், உறவு என்ன???

இப்படி நேர்மறையான சிந்தனையுடன் ஆய்வை தொடர்ந்தால் நிச்சயம் ஒரு நல்ல பதில் கிடைக்கும்.

மேற்கொண்டு நமது ஆய்வை அடுத்த பதிவில்.....



அன்புடன்.......

No comments:

Post a Comment