Monday, 10 September 2012
ஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்
Friday, 7 September 2012
பெரியாரிசம்.......(பதிவு 10 )
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே, இந்த பெரியாரிசத்தை சற்று வித்தியாசமாக
“வழக்காடு மன்றம்” வடிவில்
அலசலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது, எனவே........
வழக்காடு மன்றம்....
வழக்கு தொடுப்பவர் : ஞானசூனியன்.
வழக்கை மறுப்பவர் : ஆளவந்தான்.
இடம் : மக்கள் மன்றம்.
நடுவர் : மக்கள்.
வழக்கு விபரம் : சுயமரியாதை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு என்ற அருமையான கொள்கைகளை கேவலப்படுத்திய ஈ.வெ.இராமசாமி நாயக்கர் குற்றவாளியே....
விசாரணை நாள் (1)
நடுவர் : ஈரோடு வெங்கட்ட ராமசாமி என்பவர் பின்னாளில் தந்தை பெரியார்
என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஒருவர் மீது ஒரு வழக்கு
வருகிறதென்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக இம்மக்கள் மன்றம் கருதுகிறது.
மக்கள் மன்றம் முன் அனைவரும் சமமே என்ற கோட்பாட்டின்படி இந்த வழக்கை விசாரிக்க
இம்மக்கள் மன்றம் தீர்மானிக்கிறது. எனவே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே உங்கள்
வழக்கை பதிவு செய்யுமாறு அழைக்கிறோம்.
ஞானசூனியன் : மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, எனது வழக்கு ஈ.வெ.ரா
அவர்கள்மீது பல குற்றச்சாட்டுகளை கொண்டது. எனவே ஒவ்வொரு குற்றச்சாட்டாக
எடுத்துரைக்க அனுமதி வேண்டுகிறேன்.
நடுவர் : அனுமதி அளிக்கப்படுகிறது.
ஞானசூனியன் : கணம் நடுவர் அவர்களே எனது முதல் குற்றச்சாட்டு. “அனைவருக்கும்
சுயமரியாதை தேவை என்பதை தனது கொள்கையாக பிரகனப்படுத்திக்கொண்ட ஈ.வெ.ரா அவர்கள்
கேரளாவில் வைக்கம் போராட்டத்தின்போது தாழ்த்தப்பட்டோரின் சுயமரியாதையை அடகு வைத்தவர்தான்
இந்த ஈ.வெ.ரா. எனவே இவரை நான் குற்றவாளி என்று குற்றம் சாட்டி மக்கள் மன்றத்தின்
முன் நிறுத்தியிருக்கிறேன்.”
நடுவர் : வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே இந்தக் குற்றச்சாட்டு பற்றி
உங்கள் கருத்து மற்றும் மறுப்பு ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும்.
ஆளவந்தான் : வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள் எனது கட்சிக்காராகிய நாடு
போற்றும் “பகுத்தறிவுப் பகலவன்”
தந்தை பெரியார் அவர்களை எந்த மரியாதையும் இல்லாமல் வெறுமனே ஈ.வெ.ரா என்று
குறிப்பிட்டதிலிருந்தும், கேரளாவில் வைக்கத்தில் நடந்த தீண்டாமை கொடுமையையும்,
சாதிக் கொடுமையையும் அறியாமல் “பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியார்மீது இப்படியொரு குற்றச்சாட்டை
வைத்ததிலிருந்தும் எனக்கு ஒன்று உறுதியாகத் தெரிகிறது.
நடுவர் : என்ன அது?
ஆளவந்தான் : அவருடைய பெற்றோர்கள் அவருக்கு மிகச்சரியாக பெயர்
சூட்டியுள்ளார்கள் என்பதும், அந்தப் பெயருக்கேற்றபடி தன்னை
வெளிப்படுத்திக்கொண்டதும் உறுதியாகத் தெரிகிறது.
நடுவர் : தனிமனித விமரிசனம் தேவையில்லை. வழக்கு சார்ந்த உங்கள்
கருத்தையும் மறுப்பையும் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.
ஆளவந்தான் : கணம் நீதிபதி அவர்களே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள்
வைக்கம் வரலாறு தெரியாமல் இப்படி பிதற்றுகிறார். அவருக்காக அந்த வரலாற்றை இங்கு
எடுத்துரைக்க அனுமதி வேண்டுகிறேன்.
நடுவர் : அனுமதி அளிக்கப்பட்டது.
ஆளவந்தான் : திரு வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே கவனமாகக் கேளுங்கள். கேரளாவில்
உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் பின்னாளில் திருவாங்கூர் என்று மாற்றப்பட்ட
நகரில் உள்ள கோயில்களில் தீண்டாமை கொடுமை நிலவியது. கோயில்களில் அரிசன மக்கள்
என்றழைக்கப்படும் தலித் மக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கோயில்
இருக்கும் விதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924 இல்
சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்)
போராட்டம் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து
போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி
சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில்
கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரகள் கலந்து கொள்ளவில்லை.
பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை
தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என
தமிழ் மக்களால் அழைக்கப்படலானார்.
இதுமட்டுமல்ல “வெண்தாடி
வேந்தன்” “பகுத்தறிவுப் பகலவன்” பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்காக,
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, எத்துனை எத்துனை போராட்டங்களை
நடத்தியிருக்கிறார் தெரியுமா? இந்த நாடே அறியும். இப்படி நாடறிந்த ஒரு
பெருந்தலைவரை, புரட்சி சிந்தனையாளரை, தத்துவ மேதையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும்
உள்நோக்கத்துடன் இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்,
வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்கள்.
எனவே திரு வழக்கறிஞர்
ஞானசூனியன் அவர்கள் இந்த குற்றச்சாட்டை திரும்பப் பெறவேண்டும். அல்லது மக்கள்
மன்றம் இந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து ஞானசூனியன் அவர்களை குற்றவாளி என்று
தீர்ப்பளிக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கிறேன்.
நடுவர் : வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களை “குற்றச்சாட்டை திரும்பப்பெற
வேண்டும்” என்றுகேட்க வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களுக்கு
உரிமை உண்டு. குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யுமாறு எங்களுக்கு உத்தரவிட
வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களுக்கு
எந்தவிதமான உரிமையும் கிடையாது. எதிர்தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல்,
குற்றச்சாட்டை தீர விசாரிக்காமல் எப்படி குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யமுடியும்? எனவே
குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதற்கில்லை. வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களே உங்கள்
குற்றச்சாட்டை தெளிவாகக் கூறவேண்டும்.
ஞானசூனியன் : மேன்மை தங்கிய நடுவர் அவர்களே, “வெண்தாடி வேந்தன்” “பகுத்தறிவுப் பகலவன்” பெரியார் அவர்கள் தமிழக மக்களுக்காக,
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
இந்த நாடே அறியும். இப்படி நாடறிந்த ஒரு பெருந்தலைவரை, புரட்சி சிந்தனையாளரை,
தத்துவ மேதையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் இப்படியொரு பொய்யான
குற்றச்சாட்டை நான் முன்வைத்திருப்பதாகவும், எனவே என்னை குற்றவாளி என்று
தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்கள் என்மீது குற்றம்
சாட்டியிருக்கிறார்.
ஈ.வெ.ரா அவர்களின்மீது
என்னால் சாட்டப்பெற்ற குற்றச்சாட்டிற்கு நான் விளக்கம் தர கடமைப்பட்டிருக்கிறேன்.
வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே ஈ,வெ.ரா அவர்களைப்பற்றி அதாவது வைக்கம்
போராட்டத்தைப் பற்றியும் மற்றும் பல போராட்டங்களைப் பற்றியும் நன் நன்கு அறிவேன்.
இந்த நாடே அறியும். ஆனால் அந்த வைக்கம் போராட்டத்தின் விளைவு என்ன? என்பதுதான்
இங்கு நான் வைக்கும் குற்றச்சாட்டு.
நடுவர் : வைக்கம் போராட்டத்தின் விளைவு இந்த நாடே அறிந்த விஷயம்தானே?
தாழ்த்தப்பட்ட தலித்துகள் கோயிலுக்குள் நுழைய இருந்த தடை விலக்கப்பட்டதே? இதில்
என்ன குற்றம் இருக்கமுடியும்?
ஞானசூனியன் : மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, விளக்கமாக கூறுகிறேன்.. இன்று திருவாங்கூர்
என்றழைக்கப்டும் வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாகிய தலித்துகள் கோவிலுக்குள்ளே
நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேலும்
கோவில் இருக்கும் வீதியில் கூட தலித்துகள் நடக்கக்கூடாது என்றும்
தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதற்காக போராட்டம் நடத்தியது, பார்ப்பனர்களின்
கோயிலுக்குள் எனதுமக்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று போராடியது, அந்தப்
போராட்டத்தில் தலித்துகளின் தன்மானத்தை, சுயமரியாதையை அடகு வைத்தது இவையெல்லாம்
குற்றமில்லையா?
இன்னும் விளக்கமாக
கூறுகிறேன். சுயமரியாதை என்றால் என்ன? தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல்
அடுத்தவர்களிடம் தன்னிடம் இல்லாத ஒன்றை கேட்காமலிருப்பதும், அப்படி தன்னிடம்
இல்லாததை தானே சுயமாக சம்பாதித்துக்கொல்வதுமே, சுயமரியாதை. ஈ.வெ.ரா. அவர்கள் தனது
மக்களை பார்ப்பனர்கள் கோயிலுக்குள் அனுமதிக்காததற்கு அவர்களிடம் ஏன்
போராடவேண்டும்? மாறாக தலித்துகளிடம் உங்களுகென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள்,
அந்த கோயிலுக்கு நீங்களே பூசாரியாக இருக்கலாம், விருப்பப்பட்டால் பார்பனர்கள்
அங்கு வரட்டும், நீங்கள் தடுக்காதீர்கள், கடவுள்முன் அனைவரும் சமமே எனவே நீங்கள்
உங்கள் தன்மானத்தை விட்டு பார்பனர்களிடம் அனுமதி வேண்டி போராடுவதை விட்டுவிட்டு
உங்களுக்கென்று ஒரு கோயிலை கட்டிக்கொள்ளுங்கள். அது சிறியதாக இருந்தாலும்
பரவாயில்லை, இறைவன் கோபித்துக்கொள்ளமாட்டார், ஏனென்றால் உங்கள் உள்ளம் பார்ப்பனக்
கோயில்களைவிடப் பெரியது, மேலும் கோயிலுக்குள் நுழைய பார்ப்பனன் அனுமதித்தாலும் கடவுளை
பார்க்கத்தான் முடியுமே தவிர, அவருக்கு நீ பூசை செய்யமுடியாது. (இன்றளவிலும்
அதுதான் நடைமுறை.) ஆனால் உங்களுகென்று நீங்கள் கட்டிக்கொள்ளும் கோயிலில் நீங்களே
பூசாரியாக இருக்கலாம். “எலி வலையானாலும் தனிவலை” “சிங்கத்திற்கு வாலாக
இருப்பதைவிட எலிக்கு தலையாக இருப்பதே சுயமரியாதை, தன்மானம்” என்று
கூறி தலித்துகளின் தன்மானத்தை வலுப்படுத்தியிருக்கவேண்டும் மாறாக பார்ப்பனர்களிடம் தலித்துகளின் தன்மானத்தை அடகு வைத்து விட்டு, தலித்துகளையும்
கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும், என்று போராடியது குற்றமே. இந்த அடிப்படையில்
ஈ.வெ.ரா குற்றவாளியா? இல்லையா?
நடுவர் : வழக்கறிஞர் ஆளவந்தான் அவர்களே, வழக்கறிஞர் ஞானசூனியன்
மிகக்கடுமையான குற்றச்சாட்டை திரு ஈ.வெ.ரா அவ்ர்களிமீது சுமத்தியுள்ளார், எங்களைப்
பொருத்தவரையில் இவர் குற்றச்சாட்டில் நியாயம் இருபதாகத் தோன்றுகிறது, இது குறித்து
நீங்கள் மேலும் ஏதாவது கருத்தோ, மறுப்போ தெரிவிக்க விரும்புகிறீரா?
ஆளவந்தான் : கணம் நீதிபதி அவர்களே வழக்கறிஞர் ஞானசூனியன் அவர்களுடைய
குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
நடுவர் : வழக்கறிஞர்கள் ஞானசூனியனின் மற்றும் ஆளவந்தான் ஆகிய இருவரின்
கருத்துக்களையும் இம்மன்றம் பதிவு செய்துகொண்டுள்ளது
இம்மன்றம் நாளை ஒத்திவைக்கப்படுகிறது.
Tuesday, 4 September 2012
பெரியாரிசம் ....... (பதிவு 9)
திருக்குறளில்....பெண்ணீயம்...
அதிகாரம் 6.
குறள் 1)
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
இதன் பொருள்: இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள் கணவனின் வாழ்வுக்குப் பெருந்துனையாவாள் – டாக்டர் கலைஞர்
குறள் 2)
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
இதன் பெருள்: நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும், அதற்க்கு தனிச் சிறப்பு கிடையாது. – டாக்டர் கலைஞர்
குறள் 3)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
நல்லப் பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது. – டாக்டர் கலைஞர்.
குறள் 4)
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
இதன் பொருள்:
கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பை பெற்றுவிட்டால் அதைவிட பெருமைக்குரியது வேறு யாது?
- டாகடர் கலைஞர்
குறள் 5)
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இதன் பெருள்:
கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவளாவாள்.
-டாக்டர் கலைஞர்.
இதற்க்கு என்னுடைய தகப்பனார் (முதுகலை தமிழாசிரியர்) தந்த விளக்கம் என்னவென்றால்...
தெய்வத்தை மதிக்கிறாளோ இல்லையோ, கணவனை மதித்து, அவன்மீது என்றும் மாறாத அன்புகொண்டு வாழும் பெண்....பல ஆண்டுகளாக மழையில்லாமல் வாடும் காலத்தில் மழை பெய்தால் எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ, அந்த மகிழ்ச்சிக்கு ஒப்பானவள்.
குறள் 6)
தற்காத்து தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்.
கற்பு நெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்கு பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவளே பெண்.
- டாக்டர் கலைஞர்
குறள் 7)
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
இதன் பொருள்:
பெண்களை அடக்கி கட்டுப்பாடுகளை விதித்து பாதுகாக்கின்ற புறக்காவலால் எந்த பயனும் இல்லை. தனக்குத்தானே சுயகட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டு நேர்மை தவறாமல் தன்னைத்தானே காத்துக் கொள்வதே பெண்மையின் சிறப்பு.
- என் தகப்பனார்.
குறள் 8)
பெற்றாள் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
இதன் பொருள்:
தான்பெற்ற துணைவனை பேணிப் பாதுகாக்கும் பெண்டிர் புகழுலகை அடைகின்ற பெருமை படைத்தவர்களாவர்.
குறள் 9)
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
புகழுக்குரிய குணநலன்களை உடைய மனைவியை அடையாதவர்க்கு, தம்மை பழித்துப் பேசுவோர் முன் தலை நிமர்ந்து நடக்கமுடியாமல் குன்றிப் போய்விடுவார்கள்.
புகழுக்குரிய குணநலன்களை உடைய மனைவியை அடைந்தவன், யாருக்கும் எப்பொழுதும் தலைகுனியாமல் சிங்கம் போல பீடுநடை போடுவான்.
குறள் 10)
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
இல்வாழ்விற்கு சிறப்பாவது மனைவியின் சிறப்பு மிக்க குணங்களே.இதற்கு மேலும் சிறப்பு நல்ல குழந்தைகளை பெறுவதே.
மேற்கண்ட 10 குறள்களிலும் வள்ளுவப்பெருந்தகை எந்த ஓரு இடத்திலும் பெண்மையை சிறுமைபடுத்தவில்லை, அடிமை படுத்தவில்லை. மாறாக மொத்த சமுதாய முன்னேற்றமும் பெண்களின் கைகளில், ஒழுக்கத்தில்தான் உள்ளது. என்பதையே வலியுறுத்திக் கூறுகிறார்.
“எந்த ஓரு ஆணின வெற்றிக்குப் பின்னால் ஓரு பெண்தான் கண்டிப்பாக இருப்பாள்” இது அனுபவசாலிகளின் குறிப்பு.
பெண்களை ஒழுக்கத்துடன் இருங்கள் என்று வள்ளுவப் பெருதகை சொல்லுவது தவறா?
“*”`கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை என்றும், ஜீவனற்ற ஒரு பொருள் என்றும் காட்டிடவே அமைக்கப்பட்டது என்பதை பெரியார் மட்டுமே உணர்ந்தார். `கற்பு என்பது ஏன் ஆணுக்குக் கற்பிக்கப்பட வில்லை என கேட்டார். `கற்பு என்கின்ற ஒரு பெரிய கற்பாறை பெண்கள் தலைமீது வைக்கப்பட்டிருக்கின்ற வரையில், ஒரு நாளும் பெண்மக்களை உலகம் முன்னேற்ற மடையச் செய்ய முடியாது என்றார்.”*” என்று திரு துரை.சந்திரசேகரன் அவர்கள், ஈரோடு. வே. ராமசாமி அவர்கள் கூறியதாக எடுத்துரைக்கிறார்.
ஆண்களுக்கு “கற்புநெறி” கற்பிக்கப்படவில்லை என்பதால் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவரவேண்டும் என்று “பகுத்தறிவுப் பகலவன்”(?) கூறியது சரியா?
ஆண்களுக்கு “கற்புநெறி” கற்பிக்கப்படவில்லை என்பதால் பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளிவரவேண்டும் என்று கூறுவது எப்படியிருக்கிறது? என்றால், ஆண்கள் தவறு செய்கிறார்கள் எனவே பெண்களே நீங்களும் தவறு செயுங்கள் என்று கூறுவதாக இருக்கிறது.
“பகுத்தறிவுப் பகலவன்”(?)-னின் வழிகாட்டுதலின்படி தங்கள் குடும்பப் பெண்மணிகளை அனுமதிப்பார்களா? (இந்த வரியை எழுதியததற்க்காக பகுத்தறிவாளர்களின் வீட்டுப் பெண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தவரியை எழுதத் தூண்டியவர்களே பகுத்தறிவாளர்கள்(?)தான்)
இதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் இப்படிப்பட்ட பகுத்தறிவு எங்களுக்குத் தேவை இல்லை..
தேவை இல்லை..தேவையே இல்லை...
இவர்களை எல்லாம் ஆயிரமல்ல, லட்சம் விவேகானந்தர்கள் வந்தாலும் திருத்தமுடியாது.. திருத்த்த்தவ்வ்வ்வே முடியாது

என்கருத்து : ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் , சுயகட்டுப்பாட்டுடன் இருந்தாலே நாடு வெகு சீக்கிரம் நன்மை அடையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...
மீண்டும் அடுத்த பதிவில் இன்னும் பார்ப்போம்.
பெரியாரிசம் ........(பதிவு 8)
எது பகுத்தறிவு...?...?...?
பெண் விடுதலை என்றபெயரில் பெண்மையை இழிவு படுத்துவதா?
நான் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவன், என்று தற்பெருமை பீற்றிக்கொள்வதா?
தான்தான் அறிவாளி, மற்றவர்களெல்லாம் முட்டாள் என்று கத்திக் கொண்டிருப்பதா?
கடவுள் இல்லை என்று பிதற்றுவதா?
ஜோதிடம் பொய் என்று வாதம் செய்வதா?
இந்துமதம் எங்கே போகிறது? என்று ஏளனம் செய்வதா?
பார்ப்பனீயத்தை மட்டும் இழிவு படுத்துவதா?
புராணங்களும், இதிகாசங்களும் மக்களுக்குப் பயனற்றவை என்று இழித்துப் பேசுவதா?
பேசுவதற்கு வாய் இருக்கிறது, கையில் மைக் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதா?
எழுதுவதற்கு பேனாவும், பேப்பரும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் மனம் போனபோக்கில் எழுதுவதா?
எது சார் பகுத்தறிவு?
பெண்மை என்றால் என்ன? பெண் சுதந்திரம் என்றால் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.
மனிதர்களில் இரண்டு பிரிவுகள் மட்டுமே உண்டு. ஒன்று ஆண், மற்றொன்று பெண். இதில் உடல்ரீதியாக, ஆணுக்கு இல்லாத இரண்டு சிறப்பம்சங்கள் பெண்ணுக்கு உண்டு.
1. குழந்தை உருவாகும் கருவறை.
2. அந்தக் குழந்தைக்கு அமுதூட்டும் அமுத சுரபி.
இந்த இரண்டு சிறப்பம்சங்களும் ஆணுக்கு இல்லை,
இதைத் தவிர மூன்றாவதாக ஓரு சிறப்பம்சம் உன்டு. அது
நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களில் பூமியை மட்டும் பெண்ணாக உருவப் படுத்தினார்கள். நெருப்பு, காற்று, நீர் இமூன்றையும் ஆணாக உருவப் படுத்தினார்கள் ஆகாயத்தை மட்டும்.....(பிறகு பார்ப்போம்) நெருப்பு கற்று நீர் இவை ஒன்றையன்று அழித்துக் கொள்ளும். ஆனால் பூமி எதையுமே அழிப்பதில்லை. நெருப்பு கற்று நீர் இவை மூன்று தம் கடமையை செய்ய பூமி என்ற தளம் மிக முக்கியமானது. பெண்ணின் துணை இல்லாமல் ஆணால் எதையும் சாதிக்க முடியாது.
ஆறுகளை பெண்ணாக உருவகப் படுத்தி பெண் பெயரை சூட்டியிருப்பதன் நோக்கம் என்ன? தெரியுமா?
ஆறுகள் இரு கரைகளுக்கு நடுவே கட்டுப்பாட்டுடன் ஒடும்வரை பூமி செழிப்பாக இருக்கும். வெள்ளப் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடும்போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.
அதுபோல பெண்கள் தன் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் எல்லாவிதத்திலும் நன்மை. மாறாக தறிகெட்டு ஆடினால் ஏற்படும் அழிவு மிகக் கொடுமையாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்கள் “பெண் சுதந்திரம்” என்ற பெயரில் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்கவும்.
தான் கொண்ட லட்சியத்தில் உறுதி கொண்டிருக்கும் பெண்களில் கூட பலபேர் அந்தப் பெண்களால் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஓரு பெண்ணைப் பற்றி அவதூறு கிளப்புவது யார் தெரியுமா...நட்பே?
பெண்கள்தான் என்பதை உன்னால் மறுக்க முடியுமா?
மேலும் இயற்கையை “அன்னை” என்றுதான் அழைக்கிறோம். ஏன்? தெரியுமா? இயற்கை அமைதியாக இருந்தால் உலகமே அமைதியாக இருக்கும். சீறினால் பேரழிவை ஏற்படுத்தும்.
அதுபோலதான் பெண்மையும் அமைதியாக இருக்கும் வரை நன்மை. அவர்கள் ஆட்டம் போட்டால் அவ்வளவுதான்...
நான் இங்கு பெண்களை அமைதியாகத்தான் இருக்கச் சொல்கிறேன். கொத்தடிமையாக இருக்கச் சொல்லவில்லை.
பெண் சுதந்திரம் வேண்டும், என்று கேட்கிறார்களே!!!
பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடிய அளவுக்கு யாருக்கு அதிகாரம் அல்லது யோக்கியதை இருக்கிறது?
யாரும் யாருக்கும் சுதந்திரம் கொடுக்க முடியாது. அவரவர் சுதந்திரம் அவரவர்களிடமே இருக்கிறது. தன் சுதந்திரத்தை (தனிமனித சுதந்திரத்தை) தவறாகப் பயன்படுத்துபவர்கள் (ஆணோ அல்லது பெண்ணோ) சீரழிந்துபோகிறார்கள். தனிமனிதக் கட்டுப்பாட்டுடன் தனிமனித ஒழுக்கத்துடன் சரியாகவும், நேர்மையாகவும் தன் சுதந்திரத்தை பயன் படுத்துபவர்கள் தானும் சாதித்து தன் துணையையும் சாதிக்க வைக்கிறார்கள்.
உலகப் பொதுமறை என்றும் பொய்யாமொழி என்றும் தமிழ் மறை என்றும் என்றும் உலகத்தோர் அனைவராலும் போற்றிப் புகழப்படும்
திருக்குறளில்....பெண்ணீயம்... அடுத்த பதிவில்

Subscribe to:
Posts (Atom)