அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.
இந்தக் குறளின் பொருள் : அரம் போல கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், மனிதப் பண்பு இல்லாதவன் மரத்திற்குச் சமமானவன்.
இதில் மனிதப் பண்பில்லாதவனை மரத்திற்கு சமமாக வள்ளுவர் கூறுகிறார். இது சரியா?
மரம என்பது அவ்வளவு கேவலமானதா? மரம மனிதனுக்கு எந்தெந்த வகையில் பயன்படுகிறது? என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். வள்ளுவப் பெருந்தகைக்கு இது ஏன் தெரியாமல் போனது?
நல்லவை எல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
இந்தக் குறளின் பொருள் : செல்வம் தேடுவதற்கான ஒருவனுடைய செயல்பாடுகள் நேர்மையானதாக இருந்தபோதிலும் அது தீமையாய் முடிவதும், நேர்மையற்றதாக இருந்தபோதிலும் அது நன்மையாய் முடிவதும் இயற்கையானதே.
கேள்வி : இதுதான் இயற்கை என்றால் இவ்வுலகில் நேர்மை என்ற சொல்லே இருக்காதே. வள்ளுவப் பெருந்தகைக்கு இது ஏன் தெரியாமல் போனது?
மேற்படி குறள்களில் என்ன பிழை?
யாராவது விளக்கம் தாருங்களேன்...
யாராவது விளக்கம் தாருங்களேன்...
No comments:
Post a Comment