Pages

Friday, 22 July 2011

எத்தனை காலந்தான் ......

எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
ஒங்க நாட்டிலே நம்நாட்டிலே...

சத்தியம் தவறாத உத்தமன் போவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒங்க நாட்டிலே நம்நாட்டிலே...

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோ.......ம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்.
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்.
கருத்தாக பல தொழில் பயிலுவோம்
கருத்தாக பல தொழில் பயிலுவோம்..
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்.
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்.
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒங்க நாட்டிலே நம்நாட்டிலே..

ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம்...... ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம்.
அதில் ஆன கலைகளை சீராக பயில்வோம்
அதில் ஆன கலைகளை சீராக பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினை போக்கிட
கேள்வியும் ஞானமும் உண்டாக திரட்டுவோம்

இன்னும் எத்தனைகாலந்தான்.... இன்னும் எத்தனைகாலந்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே... இந்த நாட்டிலே.....

சின்னப் பயலே.. சின்னப் பயலே..

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..
நான் சொல்லபோற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா.
நீ...எண்ணிப் பாரடா.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி..
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி..

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா.
தம்பி மனதில் வையடா.
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா.
தம்பி மனதில் வையடா.

வளர்ந்துவரும் உலகத்துக்கே நீ வலது கையடா. நீ வலது கையடா.
வளர்ந்துவரும் உலகத்துக்கே நீ வலது கையடா. நீ வலது கையடா.

தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா..நீ தொண்டு செய்யடா.
தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா..நீ தொண்டு செய்யடா.

தானா எல்லாம் மாறிடும் என்பது பழைய பொய்யடா.எல்லாம் பழைய பொய்யடா.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...............
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...............
விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க
உந்தன் வீரத்த கொழுந்துலேயே கில்லி வப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவேடாதே....நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே..நீ வெம்பிவிடாதே...

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

கல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......

தமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின்

படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை

தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பொன்னியின் செல்வன் 1

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 3

பொன்னியின் செல்வன் 4

பொன்னியின் செல்வன் 5

பொன்னியின் செல்வன் 6

பொன்னியின் செல்வன் 7

பொன்னியின் செல்வன் 8

பொன்னியின் செல்வன் 9

பொன்னியின் செல்வன் 10

பொன்னியின் செல்வன் 11

பொன்னியின் செல்வன் 12

சுபம்....

Wednesday, 6 July 2011

         கடவுள் இருக்கின்றார்.. புரட்சி தலைவர் விளக்குகிறார்

கடவுள் இருக்கின்றார்.....
கடவுள் இருக்கின்றார்.....
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.

காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
                        கண்ணுக்குத் தெரிகின்றதா.
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.

இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா.
இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா.

இசையை ரசிகின்றாய் இசையின் உருவம் வருகின்றதா
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகின்றதா.
                                          வெளியே தெரிகின்றதா.

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
                              கண்ணுக்குத் தெரிகின்றதா.

புத்தனும் மறைந்துவிட்டான் அவன் தன் போதனை மறைகின்றதா
புத்தனும் மறைந்துவிட்டான் அவன் தன் போதனை மறைகின்றதா

சத்தியம் தோற்றதுண்டா உலகில் தர்மம் அழிந்ததுண்டா
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா.
                                          சஞ்சலம் வருகின்றதா.

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.

தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது
தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது

சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி காக்கவும் தயங்காது.

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
                              கண்ணுக்குத் தெரிகின்றதா.

கடவுள் இருக்கின்றார்...
கடவுள் இருக்கின்றார்...
கடவுள் இருக்கின்றார்

இதோ வீடியோ காட்சி...

Tuesday, 5 July 2011

திருக்குறளில் முரண்பாடு.....

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.

இந்தக் குறளின் பொருள் : அரம் போல கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், மனிதப் பண்பு இல்லாதவன் மரத்திற்குச் சமமானவன்.

இதில் மனிதப் பண்பில்லாதவனை மரத்திற்கு சமமாக வள்ளுவர் கூறுகிறார். இது சரியா?

மரம என்பது அவ்வளவு கேவலமானதா? மரம மனிதனுக்கு எந்தெந்த வகையில் பயன்படுகிறது? என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். வள்ளுவப் பெருந்தகைக்கு இது ஏன் தெரியாமல் போனது?

நல்லவை எல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

இந்தக் குறளின் பொருள் : செல்வம் தேடுவதற்கான ஒருவனுடைய செயல்பாடுகள் நேர்மையானதாக இருந்தபோதிலும் அது தீமையாய் முடிவதும், நேர்மையற்றதாக இருந்தபோதிலும் அது நன்மையாய் முடிவதும் இயற்கையானதே.

கேள்வி : இதுதான் இயற்கை என்றால் இவ்வுலகில் நேர்மை என்ற சொல்லே இருக்காதே. வள்ளுவப் பெருந்தகைக்கு இது ஏன் தெரியாமல் போனது?

மேற்படி குறள்களில் என்ன பிழை?

யாராவது விளக்கம் தாருங்களேன்...

ஆண்டவன் கட்டளை 6

ஆண்டவன் கட்டளை 6

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
                              தெய்வத்தின் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.
சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் துன்பத்தில் இன்பம் பாட்டாகும்
சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் துன்பத்தில் இன்பம் பாட்டாகும்

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்.
                                    எல்லா நன்மையும் உண்டாகும்.

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.
உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.

உண்மை என்பது அன்பாகும், பெரும் பணிவு என்பது பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும், பெரும் பணிவு என்பது பண்பாகும்

இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்.
                                    எல்லா நன்மையும் உண்டாகும்.

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

ஆசை கோபம களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

இதில் மிருகம் என்பது கள்ள மனம், உயர் தெய்வம் என்பது பிள்ளைமனம்

இந்த ஆறுகட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்.
                              ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்.

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
                              தெய்வத்தின் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

இதோ வீடியோ காட்சி...