Pages

Tuesday, 31 July 2012

அண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....

அன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் அல்லது ஊழல முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சரியான கொள்கையாக இருக்க முடியும், இருக்க வேண்டும்.

இதில் எந்த ஒரு இந்தியருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.

அண்ணா ஹசாரே அவர்கள் ஊழலை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார். இவருடைய போராட்டத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் ஆதரிக்கிறது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில்,

அதாவது ஊழலின் மதிப்பை பார்க்கும்போது 2 G யில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி, சுரங்கத்துரையில் பலலட்சம் கோடி  என்று கோடிக்கணக்கை எல்லாம் தாண்டி, ஆயிரம் கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி என்று வளர்ந்து ஆலமரமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில், (செய்தி தாளின் அடிப்படையில் கூறப்பட்டது.)

நமது பிரதமர் "கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தவறான போக்கை கண்டிக்க முடியவில்லை" என்ற வகையில் தொலைக்காட்சியில் பேட்டி தந்துள்ள இன்றைய சூழ்நிலையில் 

ஒரு அயல்நாட்டு பத்திரிகை நமது பிரதமரை செயல்படாத பிரதமர் என்று விமர்சித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில்

அன்னா ஹசாரே அவர்களின் போராட்டம் சரியானதுதானா? முறையானதா?

வலுவான லோக்பால் சட்டம் தேவை என்று ஹசாரே யாரைப்பார்த்து கேட்கிறார்? ஊழல்வாதிகளைப் பார்த்து கேட்கிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் லோக்பால் சட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம். அன்றைய பி ஜே பி இதை எதிர்த்தது. என்று காங்கிரசார் கூறுகின்றனர்.

ஆனால் அன்று எதிர்த்தவர்கள் இன்று ஆதரிக்கிறார்கள். அன்று ஆதரித்தவர்கள் இன்று லோக்பால் சட்டத்தை மதிக்கவே இல்லை.

ஏன்?

இன்றைய சூழ்நிலையில் ஊழலை ஒழிக்க முடியுமா?

குறைந்தபட்சம் கட்டுப்படுத்தவாவது முடியுமா?